வருமானம் பற்றி ஹால் வெளியிட்டுள்ள தகவல்; இந்த நிலை தொடருமா ?

  • Tamil Defense
  • April 1, 2020
  • Comments Off on வருமானம் பற்றி ஹால் வெளியிட்டுள்ள தகவல்; இந்த நிலை தொடருமா ?

21,000 கோடி வருமானம் ஈட்டிய HAL நிறுவனம் !!

பொதுத்துறை நிறுவனமான HAL செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில் 2019-20 நிதியாண்டு மார்ச்31 ஆம் தேதி நிறைவு பெற்றதையடுத்து கடந்த நிதியாண்டில் சுமார் 21,000கோடி ருபாய் வருவாய் ஈட்டியதாக தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 2018-19 மற்றும் 2019-20 நிதியாண்டுகளில் 7% வருவாய் வளர்ச்சி இருந்துள்ளது. இந்த வளர்ச்சி விகிதம் 2017-18 நிதியாண்டில் வெறும் 3.8% ஆக மட்டுமே இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2019-20 நிதியாண்டில் வேலைநிறுத்தம், குறைந்த அளவு வருவாய் , கொரோனா தொற்று என பல பிரச்சினைகள் வந்த போதும் வருவாய் அதிகமாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

HAL தலைமை மேலாண்மை இயக்குநர் ஆர். மாதவன் இதுகுறித்து பேசும் போது ” இந்த சாதனை எங்களை மேலும் ஊக்குவிக்கிறது. இனி அடுத்த கட்ட நகர்விற்கு தயாராகிறோம்” என்றார்