அக்னி-5 ஏவுகணையின் 8ஆவது வருடம் !!
1 min read

அக்னி-5 ஏவுகணையின் 8ஆவது வருடம் !!

கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அக்னி – 5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் 6ஆவது நாடாக அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், சீனாவுக்கு பின்னர் இந்தியா இணைந்தது. இதன் முலம் பல ஆசிய மற்றும் சில ஐரோப்பிய நாடுகளை தாக்கும் திறனை இந்தியா பெற்றுக்கொண்டது.

இந்த சோதனை பல மேற்குலக நாடுகளை இந்தியாவின் புதிய திறன்கள் பற்றி பதட்டமடைய வைத்ததை மறுக்க முடியாது. சீன அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் கூறுகையில் அக்னி 5 ஏவுகணையின் இயங்கும் வரம்பு சுமார் 8ஆயிரம் கிமீ எனவும் ஆனால் இந்தியா வேண்டுமென்றே 5000கிமீ என கூறியதாகவும் தெரிவித்தார்.

இதன் பின்னர் இந்தியாவும் படிப்படியாக இந்த ஏவுகணையின் ரகசியத்தை அதிகரித்தது. முதலில் குடியரசு தின அணிவகுப்பில் இருந்து காணாமல் போனது பின்னர் தற்போது மிக சொற்பமான புகைப்படங்களே பொதுவெளியில் உள்ளன.

மேலும் உலக நாடுகளை பதட்டமின்றி வைக்க நிலத்தில் இருந்து ஏவும் தொலைதூர அணு ஆயுத ஏவுகணைகள் திட்டத்தை இந்தியா நிறுத்த உள்ளதாகவும் இதற்கு மாற்றாக மிகவும் ரகசியமான நீர்மூழ்கிகளிலிருந்து ஏவப்படும் தொலைதூர அணு ஆயுத ஏவுகணைகளை இந்தியா தயாரிக்கலாம் என தெரிகிறது. கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து வேறு எந்த தொலைதூர அணு ஆயுத ஏவுகணைகள் திட்டத்தை இந்தியா அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சூர்யா அல்லது அக்னி 5ஏ ஏவுகணை அதிக தாக்குதல் வரம்பு மற்றும் பல அணுகுண்டுகளை தாங்கி செல்லும் திறனையும் கொண்டிருக்கும் என தெரிகிறது.

அக்னி-5 கன்னியாகுமரியால் இருந்து ஏவப்பட்டால் சீனாவின் எந்த பகுதியையும் தாக்க முடியும் என்பது கூடுதல் தகவல் ஆகும்.