
கடந்த ஏப்ரல் 10 அன்று கேரன் செக்டாருக்கு அருகே உள்ள எல்லைக் கோட்டு பகுதியில் இந்திய இராணுவம் கடுமையான ஆர்டில்லரி தாக்குதல்கள் நடத்தியது.இதில் தூத்நியால் என்னும் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம் கடுமையாக தாக்கப்பட்டது.இதில் 15பாக் இராணுவ வீரர்களும் எட்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது பாக்கிற்கு ஒரு எச்சரிக்கை எனவும் பாக்கின் எந்த அடிக்கும் கண்டிப்பான முறையில் இந்தியா பக்கம் இருந்து பதிலடி கிடைக்கும் என அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பாக்கின் தொடர்ந்த அத்துமீறலுக்கு பதிலடியாக தான் கிஷான்கங்கா ஆற்று கரைப்பகுதியில் தூத்நியால் பகுதி தாக்கப்பட்டது.இந்த பகுதியில் தான் ஐந்து பாக் பயங்கரவாதிகளும் இராணுவத்தால் கொல்லப்பட்டார்கள்.
கொல்லப்பட்ட ஐந்து பயங்கரவாதிகளுள் மூன்று பேர் காஷ்மீரை சேர்ந்தவர்கள்.மற்றவர்கள் ஜெய்ஸ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள்.அவர்களின் அடையாளங்களை கண்டறியும் பணி இன்னும் நடைபெற்று வருகிறது.
ஷார்தா,தூத்நியால் மற்றும் ஷாகோட் செக்டார்களை இந்திய இராணுவம் தாக்கியதாக பாக் இராணுவமும் ஒப்புக்கொண்டுள்ளது.ஆனால் இந்த தாக்குதலில் நான்கு பொதுமக்கள் மட்டுமே காயமடைந்ததாக கூறியுள்ளது.
எல்லைக்கட்டப்பாடு கோடு முழுதும் தற்போது பதற்றம் நிறைந்ததாக காணப்படுகிறது.