சோகச் செய்தி: ஐந்து இராணுவ வீரர்கள் வீரமரணம்

  • user
  • April 5, 2020
  • Comments Off on சோகச் செய்தி: ஐந்து இராணுவ வீரர்கள் வீரமரணம்

கேரனில் தற்போது நடைபெற்று வந்த என்கௌன்டரில் ஐந்து இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக இந்தியா நுழைந்த பயங்கரவாதிகள் குப்வாராவின் சுர்காமா காட்டுபகுதியில் நமது இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டனர்.

பயங்கரமான என்கௌன்டருக்கு பிறகு 5 பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டனர்.இதில் நமது வீரர்களுக்கும் குண்டுகாயங்கள் ஏற்பட்டது.இதில் ஐந்து இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

  1. சுபேதார் சஞ்சீவ் குமார் (ஹிமாச்சல பிரதேசம்)
  2. ஹவில்தார் தேவேந்தர் சிங் (உத்தரகன்ட்)
  3. பாரா வீரர் பால் கிருஷ்னன் (ஹிமாச்சல பிரதேசம்)
  4. பாரா வீரர் அமித் குமார் (உத்தரகன்ட்)
  5. சத்ரபால் சிங் ( இராஜஸ்தான்)