
டெல்லியில் அமைந்துள்ள ஒரு சிஆர்பிஎப் பட்டாலியனை சேர்ந்த 47 வீரர்களுக்கு கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே பாதிப்பு இருந்த நிலையில் தற்போது 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் இருந்து இயங்கும் ஒரு சிஆர்பிஎப் பட்டாலியன் தான் 31வது பட்டாலியன்.கடந்த நான்கு நாட்களாக இந்த பட்டாலியனில் கொரானா தொற்று பாதிப்பு அதிகரித்துகொண்டே வருகிறது.
பாதிக்கப்பட்டவர்களில் 31 பேருக்கு ஒரே ஒரு சிஆர்பிஎப் வீரரின் வழியாக பரவியுள்ளது.தற்போது பட்டாலியனில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த பட்டாலியனில் உள்ள ஒரு முதன்மை மருத்துவ அதிகாரிக்கும் கொரானா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது உயிரிழந்துள்ள சிஆர்பிஎப் வீரர் முகமது உசேன் அவர்களும் 31வது பட்டாலியனை சேர்ந்தவர் தான்.