காஷ்மீரில் சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகள் !!

  • Tamil Defense
  • April 4, 2020
  • Comments Off on காஷ்மீரில் சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகள் !!

இன்று காஷ்மீரின் குல்காமில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

கடந்த 12 நாட்களில் தெற்கு காஷ்மீரில் 4 அப்பாவி மக்களை இவர்களுடைய கொள்கையை எதிர்த்த காரணத்தால் கொன்றுள்ளனர்.

இவர்களை பற்றி தகவல் கிடைத்ததும் தரைப்படையின் பாரா சிறப்பு படையினர் மற்றும் காஷ்மீர் காவல்துறை அதிரடி படை வீரர்கள் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர்.
சில மணி நேரங்கள் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர்.

சுட்டு கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகள் ஃபயாஸ், ஆதில், மொஹம்மது ஷாஹித் ஆவர், இவர்கள் மூவரும் குல்காமின் டி.ஹெச் பொரா பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர் மேலும் இவர்கள் ஹிஸ்புல் முஜாஹிதின் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.