கொரானா மருத்துவ சப்ளை வேண்டி இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ள 30 நாடுகள்

  • Tamil Defense
  • April 6, 2020
  • Comments Off on கொரானா மருத்துவ சப்ளை வேண்டி இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ள 30 நாடுகள்

ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் சப்ளை வேண்டி இந்தியாவிடம் 30 உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் தான் சோதனை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கொரானா நோயாளிகளுக்கு தற்போது வழங்கப்படுகிறது.எல்லோருக்கும் இது வழங்கப்படமாட்டது.காரணம் பக்கவிளைவுகள்.

இந்த கொரானா தொற்றை விரட்ட மலேரியா எதிர்ப்பு மாத்திரையான ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரையை அனுப்ப வேண்டி 30 உலக நாடுகள் இந்தியாவிடம் வேண்டியுள்ளன.சில உலக தலைவர்கள் நேரடியாக இந்திய பிரதமரை தொலைபேசியில் அழைத்து மாத்திரைகளை அனுப்ப கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்கா முதல் லத்தீன் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பா வரை பல நாடுகள் மெடிக்கல் சப்ளை எதிர்பார்த்து உள்ளனர்.

மத்திய அரசு அதிகாரிகள் கூறும்போது, பிற நாடுகளின் கோரிக்கைகள் மற்றும் உள்நாட்டு தேவைகள்குறித்தும் பரிசீலித்து வருதாக கூறினர். இந்திய சுகாதார துறை இந்த மருந்தை கொரோனா நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பயன்பாட்டிற்கு அனுமதித்துள்ளது.

தற்போது வரை அமெரிக்கா, ஜெர்மனி, ஃபிரான்ஸ், பிரேசில், ஸ்பெயின், ரஷ்யா, கத்தார், சவுதி, துபாய், இஸ்ரேல் உட்பட 15 நாட்டு தலைவர்கள் பிரதமர் மோடியுடன் பேசி உள்ளனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது இந்தியா தனது 150கோடி மக்களுக்காக மிகப்பெரிய அளவில் இந்த மருந்தை தயார் செய்கிறது, இது தவிர அவர்களிடம் இந்த மருந்து கையிருப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்கள் எனவே அதில் இருந்து அமெரிக்காவுக்கு தேவையானதை அனுப்ப நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.