Day: April 29, 2020

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள குளறுபடியான வரைபடம் !!

April 29, 2020

லடாக்கின் ஒரு பகுதியான அக்ஸாய் சின் பகுதியை சீனாவுக்கு சொந்தமான பகுதியாக உலக சுகாதார நிறுவனத்தின் வரைபடம் காட்டுகிறது. மேலும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பிரச்சினைக்குரிய பகுதியாக காட்டியுள்ளது. இந்த வரைபடம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருந்தாலும், இதுவே உண்மை ஆகும். இப்பகுதிகள் நமது கட்டுபாட்டிற்கு வரும் வரை இந்த நிலையே தொடரும் இது துரதிர்ஷ்டவசமானது.

Read More

ஈரானுடைய முதல் செயற்கைகோள் தோல்வி !!

April 29, 2020

அமெரிக்க விமானப்படை சமீபத்தில் இரண்டு பொருட்களை விண்ணில் அடையாளம் கண்டதாக தெரிவித்துள்ளது. இவை “நூர் 01” செயற்கைகோள் மற்றும் “காஸேத்” ராக்கெட் ஆகும். இவை ஈரானில் இருந்து ஏவப்பட்டதாகவும் ஆனால் அதற்கான சுற்றுபாதையை அடைவதற்கு முன்னரே செயலிழந்ததாகவும் தெரிவித்துள்ளது. இந்த “நூர் 01” செயற்கைகோள் தான் ஈரானுடைய முதல் ராணுவ செயற்கைகோள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

பாகிஸ்தானுக்கு பயிற்சி விமானம் விற்க முன்வந்துள்ள சீனா !!

April 29, 2020

சீனாவின் நான்சாங் நகரத்தை தளமாக கொண்டு செயல்படும் ஹாங்டு ஏவியேஷன் இன்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கும் விமானம் தான் “ஹாங்டு எல்15 பி” ஆகும். இந்த விமானத்தை பயிற்சி விமானமாகவும், இலகுரக போர் விமானமாகவும் பயன்படுத்த முடியும். இருவர் இயக்கும் இந்த விமானம் 1729 கிமீ வேகம் வரை பறக்கும் திறன் கொண்டது மேலும் 9 ஆயுத தாங்கி அமைப்புகளை கொண்டுள்ளது இதனால் “பி.எல்-12” தொலைதூர ஏவுகணைகளை ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமானம் ஒரு […]

Read More

அமெரிக்க கப்பல் சீன எல்லையில் இருந்து விரட்டியடிப்பு !!

April 29, 2020

சீனாவின் கடல் பகுதியில் பராசெல் தீவுகளுக்கு மிக அருகே வந்ததாக அமெரிக்க கடற்படையின் ஏவுகணை நாசகாரி கப்பல் யு.எஸ்.எஸ். பேர்ரி எனும் கப்பலை சீன கடற்படை அதன் எல்லையில் இருந்து விரட்டியடித்துள்ளது. இத்தகைய சம்பவம் முதன் முதலில் சீன வரலாற்றில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகுறித்து சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் “அமெரிக்கா பிற நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை விட தற்போது கொரோனாவை தனது நாட்டில் ஒழிக்கும் பணியில் ஈடுபட வேண்டும்” என தெரிவித்துள்ளது.

Read More

மலேசியாவிற்கு ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை அனுப்ப உள்ள இந்தியா

April 29, 2020

ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை மலேசியாவிற்கு அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கோவிட்-19ஐ எதிர்த்து போராட ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை அனுப்புமாறு மலேசியா இந்தியாவை ஏற்கனவே கேட்டிருந்தது. இதுவரை இந்தியா ஐந்து மில்லியன் ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மருந்துகளை உலக நாடுகளுக்கு வழங்கியுள்ளது.தவிர 1.32 மில்லியன் பாரசிட்டமால் மருந்துகளையும் இந்தியா உலக நாடுகளுக்கு வழங்கியுள்ளது.

Read More

47 சிஆர்பிஎப் வீரர்களுக்கு கொரானா தொற்று: திணறும் 31வது பட்டாலியன் சிஆர்பிஎப்

April 29, 2020

டெல்லியில் அமைந்துள்ள ஒரு சிஆர்பிஎப் பட்டாலியனை சேர்ந்த 47 வீரர்களுக்கு கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே பாதிப்பு இருந்த நிலையில் தற்போது 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் இருந்து இயங்கும் ஒரு சிஆர்பிஎப் பட்டாலியன் தான் 31வது பட்டாலியன்.கடந்த நான்கு நாட்களாக இந்த பட்டாலியனில் கொரானா தொற்று பாதிப்பு அதிகரித்துகொண்டே வருகிறது. பாதிக்கப்பட்டவர்களில் 31 பேருக்கு ஒரே ஒரு சிஆர்பிஎப் வீரரின் வழியாக பரவியுள்ளது.தற்போது பட்டாலியனில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் […]

Read More

கொரானா தொற்றால் சிஆர்பிஎப் வீரர் முகமது உசேன் அவர்கள் உயிரிழப்பு

April 29, 2020

மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 55 வயதான சப் இன்ஸ்பெக்டரான முகமது உசேன் அவர்கள் கொரானா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் கொரானா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது உயிரிழந்துள்ளார். மயூர் விகார் கேம்பில் ஏற்கனவே கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மற்றொரு சிஆர்பிஎப் வீரரின் நர்சிங் உதவியாளர் ஒருவரால் இவருக்கும் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “வீரமான துணை ஆய்வாளரான சிஆர்பிஎப் வீரர் முகமது இம்ரம் உசேன் மறைவு வருத்தம் அளிக்கிறது.ஒரு […]

Read More