Day: April 28, 2020

தைவான் ஏவுகணை சோதனை; சீனாவுக்கு மற்றொரு செக் !!

April 28, 2020

தைவான் நாடு இந்த மாத ஆரம்பத்தில் பிங்டுங் கவுன்டியில் அமைந்துள்ள ஜியபெங் ராணுவ தளத்தில் இந்த சோதனைகளை நடத்தி உள்ளது. சோதனை செய்யப்பட்ட க்ருஸ் ஏவுகணையின் பெயர் யுன் ஃபெங் ஆகும். சுமார் 1500கிமீ தாக்குதல் வரம்பை கொண்டுள்ள இது மத்திய சீனாவில் அமைந்துள்ள பல்வேறு ராணுவ தளங்கள் துறைமுகங்கள் ஆகியவற்றை தாக்க உதவும். தைவான் நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது சீன மக்கள் விடுதலை விமானப்படை ஆகும். போர் வந்தால் சீனாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள […]

Read More

திருச்சியில் கடற்படையினர் கொரோனா நிவாரண உதவி !!

April 28, 2020

திருச்சிராப்பள்ளி மாநகரில் அமைந்துள்ள இந்திய கடற்படையின் கடற்படை ஆயுத ஆய்வகத்தில் பணியாற்றும் வீரர்கள் அனைவரும் தங்களது சம்பளத்தில் தங்களால் இயன்ற அளவுக்கு நிவாரண பொருட்களை வாங்கி தினக்கூலி மற்றும் பிறமாநில தொழிலாளர்களுக்கு அவற்றை வழங்க முடிவு செய்து நிவாரண பொருட்களை திருவெறும்பூர் தாசில்தார் அவர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் ஆயுத தொழிற்சாலைகள் வாரியத்துடன் இணைந்து திருச்சி காவல்துறையினருக்கு 500 சுய பாதுகாப்பு முகமூடிகளை வழங்க உள்ளனர்.

Read More

அக்னி-5 ஏவுகணையின் 8ஆவது வருடம் !!

April 28, 2020

கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அக்னி – 5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் 6ஆவது நாடாக அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், சீனாவுக்கு பின்னர் இந்தியா இணைந்தது. இதன் முலம் பல ஆசிய மற்றும் சில ஐரோப்பிய நாடுகளை தாக்கும் திறனை இந்தியா பெற்றுக்கொண்டது. இந்த சோதனை பல மேற்குலக நாடுகளை இந்தியாவின் புதிய திறன்கள் பற்றி பதட்டமடைய வைத்ததை […]

Read More

உலகின் விலை உயர்ந்த நாசகாரி கப்பலை பெறும் அமெரிக்க கடற்படை !!

April 28, 2020

அமெரிக்க கடற்படையின் நாசகாரி கப்பல்கள் “ஆர்லெய் பர்க்” ரகத்தை சேர்ந்தவை ஆகும். இந்த ரகத்தை சேர்ந்த சுமார் 67 கப்பல்கள் தற்போது சேவையில் உள்ளன. இதனை கட்டிய பாத் ஐயன் வொர்க்ஸ் நிறுவனம் உலகின் விலை உயர்ந்த, மிகப்பெரிய அதிநவீன ஸம்வால்ட் ரக நாசகாரி கப்பல்களை கட்டி வருகிறது. சுமார் 22ஆயிரம் டன்கள் எடை , 610அடி நீளம், 80அடி அகலம் என பிரமாண்ட கட்டமைப்பு கொண்ட இந்த கப்பலில் பல்வேறு வகையான ஆயுதங்களை மிகப்பெரிய அளவில் […]

Read More

இந்திய தரைப்படையின் புதிய கண்டுபிடிப்பு !!

April 28, 2020

இந்திய தரைப்படை கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டிற்கு பெரிய அளவில் மருத்துவ ரீதியாகவும், உபகரணங்கள் கண்டுபிடிப்பிலும் உதவி வருகிறது. தற்போது தரைப்படையின் எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினியர்ஸ் கோர் படையினர் ஒரு கருவியை வடிவமைத்து உள்ளனர். இக்கருவிரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயக்கப்படும் வாகனமாகும், சுமார் 100மீட்டர்.தொலைவு வரைக்கும் எந்தவித மனித நெருக்கமின்றி பொருட்களை கொண்டு சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது சமூக இடைவெளியை மையக்கருத்தாக கொண்டு அதனை ஊக்குவிக்கும் வகையில் தயாரிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

கர்நாடக காவல்துறையால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்ட கோப்ரா வீரர் !!

April 28, 2020

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தின் எக்ஸம்பா கிராமத்தை சேர்ந்தவர் மத்திய ரிசர்வ் காவல்படையின் 207ஆவது கோப்ரா அதிரடிப்படை பட்டாலியன் வீரர் சச்சின் சாவந்த். இவர் ஒரு சிறந்த கமாண்டோ வீரர் என மத்திய ரிசர்வ் காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இடதுசாரி பயங்கரவாதிகளுடனான சண்டையில் பல்வேறு மிக கடுமையான ஆபரேஷன்களை மேற்கொண்டவர் எனவும் கூறுகின்றனர். விடுமுறையில் வந்திருந்த அவர் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு வெளியே தனது இருசக்கர வாகனத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவர் தனது பொதுவெளியில் செல்லாமல் […]

Read More

கல்ப் நாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்க தயாராகும் கடற்படை-மூன்று பெரிய போர்க்கப்பல்கள் தயார்

April 28, 2020

கல்ப் நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தனது மூன்று மிகப் பெரிய கப்பல்களை கடற்படை தயார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐஎன்எஸ் ஜலஷ்வா உடன் இரு டேங்க் தரையிறக்கு கப்பல்கள் இணைந்து இந்த பணியை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.வெகுசில நாட்களுக்குள் இந்த கப்பல்கள் செல்லவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஜலஷ்வா மட்டுமே 850 முதல் 1000 பேர்களை மீட்டு கொண்டு வரும் திறனுடையது.கும்பிர் ரக இரு கப்பல்களும் அதை விட சிறியன என்றாலும் குறிப்பிடத்தக்க அளவு மக்களை […]

Read More

2020 ஏப்ரல் வரை 54 பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ள நமது பாதுகாப்பு படைகள்

April 28, 2020

காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்திற்குள் மட்டுமே 7க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை இந்திய இராணுவம் வீழ்த்தியுள்ளது.இந்த மாதம் மட்டுமே 22 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். இதனால் இந்த வருட ஏப்ரல் வரை வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 54ஆக உயர்ந்துள்ளது. கொரானா தாக்கம் இருந்தபோதும் தகுந்த பாதுகாப்புடன் காஷ்மீரில் தொடர்ந்து ஆபரேசன் நடைபெற்று தான் வருகின்றன.பயங்கரவாதிகள் தங்கள் உயிரை காத்துக்கொள்ள ஓடத்தான் செய்கின்றன.தற்போது காஷ்மீரில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறைவாகவே தான் உள்ளது. எல்லையில் கண்காணிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதனால் பயங்கரவாத […]

Read More