இஸ்ரேலிய நிறுவனமான எல்பிட் இந்திய விமானப்படைக்கு சுமார் 103மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மின்னனு கருவிகள் வழங்கும் ஒப்பந்தத்தை வென்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூன்று வருடங்களில் செயல்படுத்தி முடிக்கப்படும் எனவும், நீண்ட கால பராமரிப்பு பணிகளும் இதில் அடங்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் எட்கர் மேய்மன் கூறுகையில் இந்த ஒப்பந்தத்தின் படி இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களில் மின்னனு அமைப்புகளும் தற்காப்பு அமைப்புகளும் பொருத்தப்படும் என தெரிவித்தார்.
Read Moreஇந்த ரேவதி மத்திய கட்டுபாட்டு ரேடார் இந்திய கடற்படையின் ப்ராஜெக்ட்28 கப்பல்களில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ப்ராஜெக்ட்28 கப்பல்கள் கமொர்ட்டா ரக நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை கப்பல்களாகும். இந்த வகை கப்பல்களில் ஐ.என்.எஸ் கமொர்ட்டா, ஐ.என்.எஸ் கட்மாட், ஐ.என்.எஸ் கில்டான் மற்றும் ஐ.என்.எஸ் கவராட்டி என நான்கு கப்பல்கள் அடங்கும். இந்த ரேவதி ரேடார் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஒரு பிரிவான மின்னனு மற்றும் ரேடார் மேம்பாட்டு அமைப்பினால் வடிவமைக்கப்பட்டு பெல், லார்ஸன் அன்ட் டுப்ரோ, […]
Read Moreசீன அரசு பத்திரிகையான க்ளோபல் டைம்ஸ் ஏப்ரல் 22 அன்று வெளியிட்டுள்ள செய்தியில் சீன கடற்படை புதிய அதிநவீன நீர்மூழ்கி ஒன்றினை தனது படையில் இணைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் இந்த செய்திகுறிப்பில் அது என்ன வகை வகையான நீர்மூழ்கி கப்பல் என குறிப்பிடபடவில்லை. அனேகமாக இது தற்போது சேவையில் இருக்கும் அணுசக்தியால் இயங்கும் டைப்094 அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிகளின் அடுத்த வடிவமான டைப்096 ரக நீர்மூழ்கியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.இது அடுத்த தலைமுறை நீர்மூழ்கி கப்பலாகும். […]
Read Moreபஞ்சாப் மாநில காவல்துறை சுமார் 29லட்சம் ருபாய் சகிதம் ஹிஸ்புல் முஜாஹிதின் பயங்கரவாதியை கைது செய்துள்ளனர். பஞ்சாப் காவல்துறை தலைவர் இதுகுறித்து அளித்த பேட்டியில், ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம் அவந்திபோரா காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட நவ்காம் பகுதியை சேர்ந்த அப்துல் சமாத் வகாய் என்பவரின் மகன் ஹிலால் அஹமது வகாய் எனும் ஹிஸ்புல் முஜாஹிதின் பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். இவனை ஜம்மு காஷ்மீர் ஹிஸ்புல் முஜாஹிதின் இயக்க தலைவன் ரியாஸ் நாய்க்கூ ஒரு அடையாளம் தெரியாத […]
Read Moreமின்னனு போர்முறை என்பது மின்னனு அமைப்பகளை நமக்கு சாதகமாகவும் எதிரிகளுக்கு பாதகமாகவும் பயன்படுத்தும் போர்முறையாகும். அதாவது எதிரிகளின் ரேடார்கள், தொலைதொடர்பு கருவிகள் ஆகியவற்றை ஜாம்மர்கள் மூலம் முடக்கி நமது மின்னனு சாதனங்கள் சிறப்பாக வேலை செய்வதை உறுதி செய்ய பயன்படுத்தும் முறையாகும். கண்ணுக்கு தெரியாத இந்த போர்முறை தான் இன்றைய நவீன போர்களில் வெற்றி தோல்வியில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த மின்னனு போர்முறையில் உளவு, கண்காணிப்பு, தொலைதொடர்பு முடக்கம், ஒட்டுகேட்பது என அனைத்தும் அடங்கும்.மேலும் இன்றைய […]
Read Moreகாஷ்மீரின் குல்கமில் நேற்று நான்கு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டிருந்த வேளையில் இன்று மேலும் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் குல்கம் என்னுமிடத்தில் பயங்கரவாதிகளின் இருப்பு குறித்த தகவல் இராணுவத்தை அடைந்தது. ஆபரேசனை தொடங்க முடிவு செய்த இராணுவம் ஆபரேசன் அஸ்தலை தொடங்கியது. பயங்கரவாதிகள் இருக்கும் பகுதியில் படைகளை ஒருங்கிணைத்து அந்த பகுதிகளை முற்றுகை இட்டது.ெ என்கௌன்டர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.நேற்று மட்டும் நான்கு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கள் […]
Read Moreஇந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து தற்போது பிரம்மாஸ் ஏவுகணையின் தாக்குதல் வரம்பை சுமார் 600கிமீ தொலைவுக்கு அதிகரிக்க முடிவு செய்துள்ளன. இந்தியா தற்போது ஏவுகணை தொழில்நுட்ப கட்டுபாட்டு அமைப்பில் இணைந்துள்ள காரணத்தால் பிரம்மாஸின் எல்லையை பன்மடங்கு அதிகரிக்க முடியும். இந்த 600கிமீ தாக்குதல் வரம்புள்ள ஏவுகணை வான் நீர் நிலம் என மூன்று டைமன்ஷன்களிலும் பயன்படுத்த கூடியதாக இருக்கும். ஆகவே இந்த புதிய ஏவுகணை பாகிஸ்தானுக்கு பெரிய ஆபத்தாக விளங்கும் என்பதில் துளியும் ஐயமில்லை.
Read Moreபிறப்பு : கான்பூர்,உ.பி. சேவை: இராணுவம் தரம்: கேப்டன் பிரிவு : 310 மீடியம் ரெஜிமென்ட் ரெஜிமென்ட் : ரெஜிமென்ட் ஆப் ஆர்ட்டில்லரி வீரமரணம்: ஏப் 27, 2017 கேப்டன் ஆயுஷ் உத்திரப்பிரதேசத்தின் கான்பூரில் பிறந்தவர்.உபி காவல்துறை ஆய்வாளரின் மகன் என்பதால் இளவயதிலேயே இராணுவத்தில் இணைய ஆர்வம் தானாக வந்தது.என்டிஏவில் நுழைந்தார்.பிறகு டிசம்பர் 30,2012ல் ஐஎம்ஏவில் நுழைந்து பயிற்சி பெற்றார். பயிற்சி முடித்த பிறகு கேப்டன் ஆயுஷ் ஆர்டில்லரி ரெஜிமென்டில் கன்னராக இணைந்தார்.அதன் பிறகு 2017ல் 310வது […]
Read More