Day: April 23, 2020

கடற்படையின் காவலர் படையில் பெண் அதிகாரிகள் !!

April 23, 2020

இந்திய கடற்படை தனது காவலர்படையில் பெண் அதிகாரிகளை நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது. தற்போது கடற்படை அதிகாரிகளிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாகவும், தேர்வு செய்யப்படும் அதிகாரிகள் ஐ.என்.எஸ் மின்டோவியில் உள்ள ப்ரோவோஸ்ட் பள்ளியில் பயிற்சிக்கு பின்னர் கடற்படையின் காவல் பிரிவில் இணைக்கப்படுவர். இந்திய கடற்படை பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர சேவைக்கான வாய்ப்பினை வழங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய தரைப்படையும் தனது காவலர் படையில் 100 பெண் வீரர்களை இணைக்க பயிற்றுவித்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்க விஷயம் […]

Read More

சற்றும் குறையாத ஊடுருவல்கள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் !!

April 23, 2020

தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவாணே சமீபத்தில் அளித்த பேட்டியில் “பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து வருவதாகவும், இவர்களை ஊடுருவ வைப்பதற்காக பாக் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது” என குறிப்பிட்டார். தற்போது கொரோனா பரவி வரும் சூழலையும் சமாளித்து எல்லை மற்றும் உட்பகுதிகளில் ராணுவம் பயங்கரவாதத்தையும் ஒடுக்க வேண்டிய பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனாலும் இதையெல்லாம் தாண்டி ராணுவம் சிறப்பாக செயல்பட்டு பனிக்கால ஊடுருவலை பெருமளவில் தடுத்துள்ளது மேலும் கடுமையான கட்டுபாடுகள் காரணமாக […]

Read More

எல்லையில் வெயில் காலத்திற்கு தயாராகும் இந்திய ராணுவம் !!

April 23, 2020

பனிக்காலம் முடிந்து வெயில்காலம் தொடங்கவுள்ள நிலையில் எல்லையில் பயங்கரவாதிகளை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராகி வருகிறது என மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். எல்லையோரம் பாகிஸ்தான் பனிக்காலத்தில் பெரிய அளவில் பயங்கரவாதிகளை அனுப்ப முடியாத நிலையில் வெயில் காலத்தை பயன்படுத்தி அதிக அளவில் பயங்கரவாதிகளை ஊடுருவ வைக்க வாய்ப்புள்ளதாக ராணுவம் நம்புகிறது. இதற்கென தயாராகும் வகையில் கிரிட் அடிப்படையிலான பல அடுக்கு பாதுகாப்பு முறைகளை பின்பற்றவும், கண்காணிப்பு மற்றும் கண்டுபிடித்தல் கருவிகளை உபயோகிக்கவும் ராணுவம் முடிவு […]

Read More

தென்சீன கடலில் அதிகரிக்கும் பதற்றம் !!

April 23, 2020

தென்சீன கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையின் 5ஆவது தாக்குதல் படையணி சீனாவுக்கு எதிராக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது ஏற்கனவே பதற்றத்தை உருவாக்கி உள்ளது. மேலும் கடந்த இரண்டு வாரங்களாக மலேசியா அருகில் உள்ள மேற்கு கபெல்லா மகுதியில் மலேசியா மற்றும் சீனாவுக்கு இடையில் தகராறு ஏற்ப்பட்டுள்ளது. இதில் மலேசியாவுக்கு ஆதரவாக அமேரிக்கா தனது கடற்படை கப்பல்களை களமிறக்கியது. சுமார் 850சதுர கிமீ பகுதியில் ஏறத்தாழ 8 சீன மற்றும் அமேரிக்க கடற்படை கப்பல்கள் குவிந்திருந்த நிலையில் நேற்று […]

Read More

வழிகாட்டும் அமைப்பில் தவறுகளை தடுக்க இந்தியாவின் கண்டுபிடிப்பு !!

April 23, 2020

பூமியின் ஐயனோஸ்பீயரில் உள்ள எலக்ட்ரான் அடர்த்தியானது, துல்லியமாக வழிகாட்டாமல் வழிகாட்டி அமைப்புகளில் தவறை ஏற்படுத்துகிறது. இந்திய புவிகாந்த கல்லூரியின் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளனர். இதன்படி ஐயனோஸ்பீயரில் உள்ள எலக்ட்ரான்களின் அடர்த்தியை துல்லியமாக கணித்து ஜி.பி.எஸ்/ ஜி.என்.எஸ்.எஸ் அமைப்புகளில் தவறு ஏற்படாமல் தடுக்க முடியும். சிறப்பான ஐயனோஸ்பீயர் சர்வே செயற்கைகோள் அடிப்படையிலான வழிகாட்டி அமைப்புகளில் சிறப்பான துல்லியத்தை வழங்கும். தற்போதுள்ள ஐயனோஸ்பீயர் தரவுகளை விட இது துல்லியமானது என்கிறார் இந்த புவிகாந்த கல்லூரியின் முனைவர். எஸ். […]

Read More

உறவினர்களிடம் ஒப்படைக்கபடாத பயங்கரவாதிகளின் உடல்கள்; கடுப்பில் பயங்கரவாத தலைவர்கள் !!

April 23, 2020

உயிரிழந்த பயங்கரவாதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்படாத காரணத்தால் காஷ்மீர் மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வரும் பயங்கரவாத கும்பல்கள் அரசு நிர்வாகம் மீது மிகுந்த கோபம் மற்றும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. சமீபத்தில் நடைபெற்ற என்கவுன்டரில் வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகள் இருவரின் உடல்களும் அடையாளம் தெரியாத இடத்தில் ராணுவ வீரர்களால் புதைக்கப்பட்டன. தற்போது ஒரு நபர் தனது வழக்கறிஞர்களுடன் வந்து இறந்தவர்களில் ஒருவன் தனது சகோதரன் என்றும் சண்டை நடந்த சமயத்தில் தனக்கு அழைப்பு விடுத்ததாகவும் தற்போது […]

Read More

ஆபத்தில் இந்திய பாதுகாப்பு துறை நிறுவனங்கள் !!

April 23, 2020

தற்போது கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக ஆயுத தளவாடங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள 40% சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நிரந்தரமாக முடப்படும் அபாயம் எழுந்துள்ளது. இது பல்லாயிரம் தொழிலாளர்களையும் அவர்களது குடும்பங்களையும் பாதிக்கும் மேலும் நாட்டின் பாதுகாப்பையும் பாதிக்கும். மத்திய அரசின் உதவி திட்டம் இல்லையெனில் இந்த நிறுவனங்கள் முடப்படுவதை தவிர வேறு வழியில்லை என்று கூறப்படுகிறது.

Read More