Day: April 22, 2020

ஈரான் கடற்படை கப்பல்களை தாக்க உத்தரவிட்டார் ட்ரம்ப் !!

April 22, 2020

கடத்த வாரம் ஏடன் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்க கப்பல்களை சுமார் 11 ஈரானய கடற்படை கலங்கள் வழிமறித்து தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இனிமேல் ஏதேனும் ஈரானிய கடற்படை கலங்கள் தொந்தரவு செய்தால் அவற்றை தாக்கி அழிக்க அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Read More

அஸ்திரா ஏவுகணையின் புதிய வடிவம் !!

April 22, 2020

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் சதிஷ் ரெட்டி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “அஸ்திரா ஏவுகணையின் வெர்டிக்கல் லாஞ்ச்” அதாவது செங்குத்தாக செல்லும் வடிவத்தை தயாரிக்க உள்ளதாக தெரிவித்தார். இந்த ஏவுகணையானது நமது சொந்த தயாரிப்பில் தயாராகும் 5ஆவது வான் பாதுகாப்பு அமைப்பாக இருக்கும் மேலும் தரையில் இருந்து இயங்கும் அஸ்திரா 360டிகிர சுற்றளவுக்கு 10 -15 கிமீ வரை தாக்கும் திறன் கொண்டிருக்கும், கூடுதல் பூஸ்டர்கள் இணைக்கப்பட்டால் 30கிமீ வரை தாக்குதல் நடத்தும் […]

Read More

அண்டை நாடுகளுக்கு அனுப்ப ராணுவ மருத்துவர்களை தயார் செய்யும் தரைப்படை !!

April 22, 2020

ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு உதவ மருத்துவர்களை தயார்நிலையில் இருக்க தரைப்படை அறிவுறுத்தியுள்ளது. கடந்த மாதம் மாலத்தீவுகளுக்கு 14 பேர் கொண்ட ராணுவ மருத்துவ குழுவும் இந்த மாதம் குவைத் நாட்டிற்கு 15 பேர் கொண்ட ராணுவ மருத்துவ குழு அனுப்பபட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த மருத்துவ குழுக்கள் மேற்குறிப்பிட்ட நாடுகளில் சென்று அந்நாட்டு மருதாதுவர்களுக்கு பயிற்சி அளிப்பது, ஆய்வகங்களை அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்வர். மேலும் இந்தியா 55நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிக்ளொரோக்யின் மாத்திரைகளை அனுப்பி […]

Read More

அமெரிக்காவுக்கு சவால் : பலத்தை அதிகரிக்கும் சீன மரைன் கோர் படை

April 22, 2020

2லட்சம் வீரர்களுடன் பல வருடங்களாக உலகின் சிறந்த மரைன் படையாக அமெரிக்க மரைன் கோர் விளங்கி வருகிறது, குறிப்பாக இரண்டாம் உலகப்போரில் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் நாஜி மற்றும் ஜப்பானிய படைகளை எதிர்த்து போரிட்டு மிகுந்த அனுபவம் வாய்ந்த படையாக உருமாறியது, பின்னர் கொரியா வியட்நாம், லெபனான்,கொசோவா, போஸ்னியா, ஈராக், ஆஃப்கானிஸ்தான், வளைகுடா போர்கள் என பல பெரிய மற்றும் சிறிய சண்டைகளில் பங்கேற்று அனுபவம் பெற்றுள்ளது. அமெரிக்க ராணுவ பலத்தில் குறிப்பிட தகுந்த சக்தி மரைன் கோர் […]

Read More

அசுரவேகம்-தனது இரண்டாவது டைப்-075 எல்ச்டி ரக கப்பலை லாஞ்ச் செய்த சீனா

April 22, 2020

ஆச்சரியமளிக்கும் வேகத்தில் சீனா தனது கடற்படை பலத்தை அதிகரித்து வருகிறது.வேகம் தான் அதன் பிரதான குறிக்கோளாகவே உள்ளது.இந்த தலைமுறையில் அது எப்படியும் உலக கடற்பரப்பை ஆள உத்தேசிவிட்டது போலும்.காரணம் அதன் ஆதிக்கத்தை அதிகரிக்க அது காட்டும் ஆர்வமே. ஆதிக்கம் அதிகமானால் எளிதாக கடற்பரப்பு வர்த்தகத்தை கைப்பற்றலாம்.பல நாடுகளில் சீனா தனது தளம் அமைக்கலாம்.அதன் வழியே அந்தந்த நாடுகளில் ஆதிக்கம்.பொருளாதார பலம் பெறும்.அதை கொண்டு கடன்வழங்குதல்.கடனை குறிப்பிட்ட நிறுவனமோ அரசோ கட்ட தவறும் பட்சத்தில் ஏதேனும் ஒன்றை கையகப்படுத்தி […]

Read More

அருணாச்சல பிரதேசத்தை இணைத்து புதிய மேப் வெளியிட்ட சீனா

April 22, 2020

தனது சர்வதேச எல்லைக் கோடாக அருணாச்சல பிரதேசத்தையும் இணைந்து புதிய மேப் ஒன்றை சீனா வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சீனாவின் தேதிய சர்வே மற்றும் பூலோக வரைபட இயக்குநகரத்தின் கீழ் செயல்படும் ஸ்கை மேப் எனும் அமைப்பு தான் இந்த வரைபடைத்தை வெளியிட்டுள்ளது. 1938ல் மக்மோகன் எல்லை ஏற்றுக்கொள்ளப்பட்டது முதல் அருணாச்சல் இந்தியாவின் ஒரு எல்லை மாநிலமாக இருந்து வருகிறது.திபத்தை 1951ல் சீனா ஆக்கிரமித்தது முதல் அருணாச்சலை திபத்தின் ஒரு பகுதி என கூறி வருகிறது. ஏற்கனவே இந்தியாவின் […]

Read More

3,800 பயங்கரவாதிகளை கண்காணிப்பில் இருந்து விலக்கிய பாகிஸ்தான் !!

April 22, 2020

பாகிஸ்தான் அரசு கண்காணிப்பு பட்டியலில் இருந்து சுமார் 3,800 பயங்கரவாதிகளின் பெயர்களை வேண்டுமென்றே நீக்கி உள்ளதாக தெரிகிறது. நியுயார்க் நகரத்தை தளமாக கொண்டு செயல்படும் “காஸ்டெல்லம்” எனும் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு எந்தவித அறிவிப்பும் இன்றி பாதிக்கு பாதி எனும் அளவில் பயங்கரவாதிகள் பெயரை கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த பட்டியலில் பல முக்கிய பயங்கரவாதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் […]

Read More

நவீன சீன டாங்கிகளை பெறும் பாக் ராணுவம் !!

April 22, 2020

சீனாவின் நோரின்கோ நிறுவனம் பாகிஸ்தான் ராணுவத்துகான தனது விடி4 டாங்கிகளின் டெலிவரியை தொடங்கியுள்ளதாக தெரிகிறது. சீனாவின் பாட்டோவ் நகரில் உள்ள நோரின்கோ தொழிற்சாலையில் இருந்து வெடிபொருள் எதிர்ப்பு கவசம் பொருத்தப்பட்ட விடி4 ரக டாங்கிகள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டில் பாகிஸ்தான் 100 டாங்கிகளை தனது ராணுவத்திற்கென வாங்க இந்த விடி4 டாங்கியை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த டாங்கி அதிநவீன போர்முறைகளுக்கு ஏற்ப செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும், […]

Read More

காஷ்மீரில் 4 பயங்கரவாதிகளை வீழ்த்தியது இராணுவம்

April 22, 2020

காஷ்மீரீல் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் 4 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். காஷ்மீரின் சோபியானில் பயங்கரவாதிகள் குறித்து பாதுகாப்பு படைகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.எனவே நமது வீரர்கள் அந்த குறிப்பிட்ட இடத்தை சுற்றிவளைத்து தாக்க தொடங்கினர். ஆபரேசன் மேலஹூரா எனும் பெயரில் இராணுவ வீரர்கள் தாக்குதலை தொடங்கினர்.தற்போது வரை இந்த சண்டையில் 4 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். ஆபரேசன் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இராணுவம் கூறியுள்ளது.

Read More

காஷ்மீரில் இரு பயங்கரவாதிகளை வீழ்த்தியது இராணுவம்

April 22, 2020

காஷ்மீரீல் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். காஷ்மீரின் சோபியானில் பயங்கரவாதிகள் குறித்து பாதுகாப்பு படைகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.எனவே நமது வீரர்கள் அந்த குறிப்பிட்ட இடத்தை சுற்றிவளைத்து தாக்க தொடங்கினர். ஆபரேசன் மேலஹூரா எனும் பெயரில் இராணுவ வீரர்கள் தாக்குதலை தொடங்கினர்.தற்போது வரை இந்த சண்டையில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். ஆபரேசன் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இராணுவம் கூறியுள்ளது.

Read More