கொரானாவால் அமெரிக்காவில் ஒரே நாளில் 2000பேர் உயிரிழப்பு

  • Tamil Defense
  • April 8, 2020
  • Comments Off on கொரானாவால் அமெரிக்காவில் ஒரே நாளில் 2000பேர் உயிரிழப்பு

கொரானா பாதிப்பு உலகையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் தற்போது கொரானா அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது.அங்கு கடந்த 24 மணி நேரத்திலேயே 2400 பொதுமக்கள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.இந்நிலையில் அமெரிக்காவிற்கு உதவ இந்தியாவும் மருந்துகளை ஏற்றுமதி செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.

தற்போது சீனாவில் மேலும் 62 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இருத்தாலும் வுகான் பகுதியில் கடந்த 72 நாட்களாக இருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மறுபுறம் பிரான்சில் கொரானா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 1417 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனால் பிரான்சில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10328ஆக அதிகரித்துள்ளது.அங்கு கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,09,069ஆக உள்ளது.