சமீபத்தில் கிடைத்துள்ள தகவல்களின்படி சுமார் 230 பயற்சி பெற்ற ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் எல்லை கட்டுபாட்டு கோடு வழியாக ஊடுருவ தயார் நிலையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதன்படி காஷ்மீர் பிராந்தியத்தில் ஊடுருவ லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதின் மற்றும் ஜெய்ஷ் இ மொஹம்மது உள்ளிட்ட இயக்கங்களை சார்ந்த சுமார் 160 பயங்கரவாதிகள் தயாராக உள்ளதாகவும்,
மேலும் ஜம்மு பிராந்தியத்தில் 70 பயங்கரவாதிகள் ஊடுருவ தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
பயங்கரவாதிகள் ஊடுருவும் இடங்கள் என கண்டறியப்பட்டுள்ள பகுதிகள் :
காஷ்மீர் பிராந்தியம்:
குரேஸ், மச்சில், தாங்தார், கேரன், நவ்காம் மற்றும் ஊரி.
ஜம்மு பிராந்தியம்:
ஜுரியன், ஹிரா நகர், கத்துவா, சம்பா மற்றும் ஜம்மு.
ரஜோரி பிராந்தியம்:
பூஞ்ச், கிருஷ்ண காட்டி, பிம்பர் காலி, சுந்தர்பானி மற்றும் நவ்ஷெரா.
பயங்கரவாத ஒழிப்பு போர் வல்லுனர்கள் கூறுகையில்,
ஜெய்ஷ் இ மொஹம்மது பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பிம்பர் மற்றும் துண்டியால் பகுதிகளில் உள்ள முகாம்களிலும்,
லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் லீப்பா பள்ளதாக்கில் உள்ள லீபா மற்றும் நீலம் பள்ளத்தாக்கில் உள்ள கேல் முகாம்களிலும் ஊடுருவ தயாராக குவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் ராவில்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமையகம் ஹர்கத் அல் ஜிஹாத் இ இஸ்லாமி என்ற பயங்கரவாத இயக்கத்தை மீண்டும் பாகிஸ்தானுடைய பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சியால்கோட் மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லி பகுதியிலும் உயிர்ப்பிக்க விரும்புவதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஃபெப்ரவரி மாதம் சியால்கோட் பகுதியில் உள்ள டெஹ்ஸில் பகுதியில் உள்ள முன்டேகே கிராமத்தில் குவிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.