
மும்பை கடற்படை தளம் ஒன்றில் பணியாற்றி வந்த 20 கடற்படை மாலுமிகளுக்கு கொரானா தொற்று உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பையில் உள்ள கடற்படை தளம் தான் ஐஎன்எஸ் ஆங்ரே.மேற்கு கட்டளையகத்தின் கீழ் இயங்கும் இந்த தளம் கடற்படையின் logistics மற்றும் admin support establishment-ஆக உள்ளது.
இந்த தளத்தில் பணியாற்றி வந்த வீரர்களுக்கு தான் தற்போது கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது.தற்போது அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட வீரர்கள் ஐஎன்எஸ் அஷ்வினி மருத்துவமனை தளத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.