Breaking News

Day: April 17, 2020

இரஷ்யாவிற்கு ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை அனுப்பிய இந்தியா-நன்றியை பகிர்ந்த இரஷ்யா

April 17, 2020

கொரானா வைரசை எதிர்த்து போரிட இரஷ்யாவிற்கு இந்தியா ஹைட்ரோக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை அனுப்பியுள்ளது.இது குறித்து பேசிய இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அவர்களின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பேஸ்கோவ் இந்தியாவின் இந்த உதவியை மறக்க மாட்டோம் என கூறியுள்ளார். முன்னதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரேசிலிய அதிபர் ஜெய்ர் போல்சோனாரோ ஆகியோரும் இந்தியாவிற்கு தங்களது நன்றியை பதிவு செய்தனர். ஹைட்ரோக்சிகுளோரோகுயின் உட்பட பல மருத்துவம்சார் பொருள்களை 26க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

Read More

புல்வாமா சிஆர்பிஎப் முகாமை பயங்கரவாதிகள் தாக்குதல்

April 17, 2020

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் காவல்படை முகாமை பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர்.இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஜெய்ஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு சிஆர்பிஎப் வீரர் மட்டும் காயமடைந்துள்ளதாகவும் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. உடனடியாக களமிறங்கிய பாதுகாப்பு படைகள் அந்த பகுதியை சுற்றிவளைத்து பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.

Read More

எட்டு இராணுவ வீரர்களுக்கு கொரானா தொற்று உறுதி

April 17, 2020

இராணுவத்தில் பணிபுரியும் எட்டு இராணுவ வீரர்களுக்கு இதுவரை கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி முகுந்த் நரவனே வெள்ளியன்று தெரிவித்துள்ளார். இவர்களுள் இரண்டு பேர் மருத்துவர்கள் மற்றும் ஒருவர் நர்சிங் உதவியாளர் ஆவார் என ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் தளபதி கூறியுள்ளார். மொத்த இராணுவத்திலும் இதுவரை எட்டு வீரர்களுக்கு மட்டுமே கொரானா தொற்று உள்ளது.4 வீரர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது.லடாக்கில் ஒரு வீரர் குணமடைந்து பணியில் இணைந்துவிட்டார் என தளபதி நரவனே அவர்கள் […]

Read More

பூஞ்ச் பகுதியில் மக்கள் வசிக்கும் பகுதியில் பாக் இராணுவம் தொடர்ந்து தாக்குதல்

April 17, 2020

வெள்ளி அன்று பாக் இராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள பூஞ்ச செக்டார் பகுதியில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து மோர்ட்டார் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. 13வது நாளாக இன்றும் மோர்ட்டார் தாக்குதல் மற்றும் பொதுமக்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடும் நடத்தி வருகிறது. பூஞ்ச் மற்றும் இராஜோரி மாவட்டங்களில் உள்ள மூன்று செக்டார்களிலும் இந்த தாக்குதலை பாக் இராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது. காலையில் 11 மணிக்கு பூஞ்சில் உள்ள கஸ்பா மற்றும் கிர்னி செக்டார்களில் பாக் […]

Read More

கொரானா தாக்கம் எதிரொலி; இராணுவ வீரர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கம்

April 17, 2020

நாடு முழுதும் கொரானா தொற்று அதிகரித்து வருகிறது.கொரனா நோயின் தாக்கமும் குறைந்த பாடில்லை.இதை தடுக்க பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக விமானம்,ரயில் மற்றும் வாகனப்போக்குவரத்து என அனைத்தும் முழுதும் நிறுத்தப்பட்டன.இதனால் இராணு வ வீரர்களுக்கும் மிகுந்த சிரமம் ஈற்பட்டது. அதாவது விடுமுறைக்காக வீடு வந்திருந்த இராணுவ வீரர்கள் பணிக்கு திரும்புவது சிரரமான காரியமாக மாறியது.இதனை சரிசெய்ய வீரர்களுக்கு மட்டும் சிறப்பு தனி இரயில் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. பெங்களூரூ ரயில்வே நிலையத்தில் […]

Read More

காஷ்மீரில் நான்கு பயங்கரவாதிகளை வீழ்த்திய இராணுவ வீரர்கள்

April 17, 2020

காஷ்மீரில் இருவேறு ஆபரேசன்களில் நான்கு பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.முன்னதாக காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற ஆபரேசனில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.முன்னதாக ராணுவத்திற்கு பயங்கவாதிகள் இருப்பு குறித்த இரகசிய தகவல்கள் கிடைத்தது. இதனையடுத்து பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை சுற்றி வளைத்து இராணுவ வீரர்கள் தாக்குதலை தொடங்கினர். ஆபரேசன் டியோர் என்னும் பெயரில் இராணுவம் தாக்குதலை தொடங்கியது.இந்த தாக்குதலில் முதலில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்.தற்போது மேலும் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டதாக வடக்கு கட்டளையகம் தகவல் வெளியிட்டுள்ளது. தற்போது கிஷ்த்வார் என்னுமிடத்தில் […]

Read More

பாக் உதவியுடன் காஷ்மீரில் 2 புதிய பயங்கரவாத இயக்கங்கள் !!

April 17, 2020

பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ ஆகியவை சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பா ஆகியவை இணைந்து காஷ்மீரில் “தி ரெஸிஸ்டன்ஸ் ஃபரான்ட்” மற்றும் “தெஹ்ரிக் இ மிலாத் இ இஸ்லாமி” எனும் இரண்டு புதிய பயங்கரவாத இயக்கங்களை தோற்றுவித்துள்ளன. தெஹ்ரிக் இ மிலாத் இ இஸ்லாமி அமைப்பின் தலைவன் நயீம் ஃபிர்தவுஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆடியோ ஒன்றில் காஷ்மீரில் இருக்கும் பயங்கரவாதிகள் அனைவரும் ஒன்றினைய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளான். அதை […]

Read More

புதிய அப்பாச்சி வானூர்தி விபத்து

April 17, 2020

விமானப்படைக்காக வாங்கப்பட்ட அப்பாச்சி தாக்கும் வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது.அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்ட இந்த வானூர்திகள் உலகிலேயே அதிநவீன தாக்கும் வானூர்திகள் ஆகும். தொழில்நுட்ப கோளாறு காரணமாக பஞ்சாபின் ஹோசிர்பூர் மாவட்டத்தில் ஒரு வயல் வெளி பகுதியில் அவரசமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

Read More

பாக்-ஆஃப்கன் எல்லையில் பிடிபட்ட ஜெய்ஷ் இ மொஹம்மது பயங்கரவாதி அதிர்ச்சி தகவல்கள் !!

April 17, 2020

பாக் ஆஃப்கன் எல்லையில் சமீபத்தில் பிடிபட்ட ஜெய்ஷ் இ மொஹம்மது பயங்கரவாதி விசாரணையின் போது தனது பயிற்சி பற்றிய தகவல்களை கூறியுள்ளான். அவன் கூறுகையில் நான் பாகிஸ்தானில் 4 மாதங்கள் ஆயுத பயிற்சி பெற்றேன் பின்னர் ஆஃப்கனில் ஊடுருவி தலிபான்களுடன் இணைந்து தாக்குதல் நடத்த அனுப்பபட்டேன். அதன்படி ஆப்கானிஸ்தானுடைய நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள மொஹமந்த் தாரா பகுதி வழியாக 10 நாட்களுக்கு முன் ஊடுருவினோம் என கூறியுள்ளான். இவர்களை பிடிக்க நடந்த தாக்குதலில் 10 ஜெய்ஷ் இ […]

Read More

கொரானா சோதனை மாதிரிகளை எடுத்துச் சென்ற வானூர்தி விபத்து

April 17, 2020

லடாக்கிலிருந்து கோவிட் -19 சோதனைக்கான மாதிரிகளை ஏந்தி சண்டிகர் செல்லும் வழியில் இந்திய விமானப்படையின் (ஐ.ஏ.எஃப்) ஒரு சீட்டா ஹெலிகாப்டர் உபியில் உள்ள கிழக்கு புற அதிவேக நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக தரையிறங்கியுள்ளது. காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான நிலையத்திலிருந்து காலையில் கிளம்பிய இந்த வானூர்தி அவசரமாக தரையிரக்கப்பட்டது.இதில் யாரும் காயமடையவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் மூலம் ஐ.ஏ.எஃப் விமானிகள் ஒவ்வொரு நாளும் லடாக் மலைப்பகுதிக்கு இருந்து சந்தேகத்திற்குரிய கோவிட் -19 நோயாளிகளிடமிருந்து மாதிரிகளை […]

Read More