1 min read
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 13பயங்கரவாதிகள் காஷ்மிரில் கொல்லப்பட்டுள்ளனர் !!
இந்திய தரைப்படையின் வடக்கு கட்டளையகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் “ஏப்ரல் மாதத்தில் மட்டும் 14 பயங்கரவாதிகளை பல்வேறு ஆபரேஷன்களில் தரைப்படையினர் கொன்றுள்ளதாக” தெரிவித்தார்.
தரைப்படையினர் பயங்கரவாத செயல்களை முடக்க உறுதி பூண்டுள்ளனர். பயங்கரவாதிகளை எல்லை கட்டுபாட்டு கோடு மற்றும் உள்பகுதிகளில் ஒடுக்குவதில் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
பயங்கரவாதிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் விரக்தி அடைந்துள்ள பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
எது எப்படியோ ராணுவம் தனது பணியில் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என மூத்த ராணுவ அதிகாரி தெரிவித்தார்.