இந்திய தரைப்படையின் புதிய கண்டுபிடிப்பு !!

  • Tamil Defense
  • April 28, 2020
  • Comments Off on இந்திய தரைப்படையின் புதிய கண்டுபிடிப்பு !!

இந்திய தரைப்படை கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டிற்கு பெரிய அளவில் மருத்துவ ரீதியாகவும், உபகரணங்கள் கண்டுபிடிப்பிலும் உதவி வருகிறது.

தற்போது தரைப்படையின் எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினியர்ஸ் கோர் படையினர் ஒரு கருவியை வடிவமைத்து உள்ளனர்.

இக்கருவிரிமோட் கண்ட்ரோல் மூலமாக இயக்கப்படும் வாகனமாகும், சுமார் 100மீட்டர்.தொலைவு வரைக்கும் எந்தவித மனித நெருக்கமின்றி பொருட்களை கொண்டு சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இது சமூக இடைவெளியை மையக்கருத்தாக கொண்டு அதனை ஊக்குவிக்கும் வகையில் தயாரிக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.