Breaking News

கொரோனா வைரஸின் பிறப்பிடம், இது உயிரியில் போர்முறையின் விளைவா ??

  • Tamil Defense
  • March 17, 2020
  • Comments Off on கொரோனா வைரஸின் பிறப்பிடம், இது உயிரியில் போர்முறையின் விளைவா ??

உலகை ஆட்டி படைக்கும் கொரோனா வைரஸ் ஃபோர்ட் டெட்ரிக் என்ற அமெரிக்க ராணுவத்தின் உயரியியல் போர்முறை ஆய்வகத்தை
(United States Biological Warfare Lab, Fort Detrick) பிறப்பிடமாக கொண்டது எனும் கருத்துக்கு வலு சேர்க்கும் வகையிலான கட்டுரை !!

இந்த ஃபோர்ட் டெட்ரிக் ஆய்வகமானது மிக கொடிய நுண்ணுயிரிகள் மற்றும் விஷங்களை ஆராய்ச்சி செய்வதற்கான இடமாகும், சமீபத்தில் குறிப்பிட்ட சில நுண்ணுயிரிகள் மற்றும் விஷங்களை வைத்து ஆராய்ச்சி செய்ய அமெரிக்க அரசு இந்த ஆய்வகத்திற்கு தடை விதித்துள்ளது. இதில் ஆந்த்ராக்ஸ், ஈபோலா , பெரியம்மை வைரஸ்கள் மற்றும் ரிசின் எனப்படும் கொடிய விஷம் ஆகியவை அடங்கும்.

ஆகஸ்ட் 2019 இல் இந்த ஆய்வகத்தில் இருந்து வைரஸ்கள் கசிந்து
அமெரிக்க படையினர் பாதிக்கப்படுகின்றனர்.

உலக ராணுவ விளையாட்டு போட்டியில் பங்கெடுக்க அக்டோபர் மாதம் 2019 சீனாவின் வுஹானுக்கு 300க்கும் அதிகமான அமெரிக்க ராணுவ விளையாட்டு வீரர்கள் சென்று நாடு திரும்புகின்றனர், சில வாரங்கள் கழித்து வூஹானில் கொரோனா வைரஸின் முதல் நோயாளி கண்டுபிடிக்கபடுகிறார்.

கொரோனா வைரஸின் ஐந்து வகைகளும் அமெரிக்காவில் உள்ளன, ஆனால் வூஹானில் ஒன்று மட்டுமே உள்ளது. இதுவே இந்த வைரஸின் பிறப்பிடமாக அமெரிக்காவை சுட்டிக்காட்டுகிறது.

1) ஆகஸ்ட் 6, 2019, ஃபோர்ட் டெட்ரிக்கில் உள்ள அமெரிக்காவின் முக்கிய உயிரியல் போர் ஆய்வகத்திற்கு பாதுகாப்பு தரங்கள் மற்றும் நெறிமுறைகள் கசிவுகள் மீறப்பட்டு கசிவு ஏற்பட்டதற்காக “சீஸ்ட் அண்ட் டிஸ்டிஸ்ட்” உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2) ஆகஸ்ட் – செப்டம்பர் 2019, அமெரிக்காவில் ஒரு மர்மமான சுவாசத்திறனை பாதிக்கும் நோய் நாடு தழுவிய அளவில் வெளிப்பட்டது, இது சில நூறு பேருக்கு கடுமையான சுவாச நோய்களை ஏற்படுத்தியது. இதுபோன்ற நிகழ்வுகள் இன்றி ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மக்கள் வாப்பிங் செய்திருந்தாலும் இதற்கு வாப்பிங் எனும் செயற்கை புகைபிடிக்கும் முறை தான் காரணம் என சொல்லப்பட்டது ஆனால் ஒரு வாப்பிங் சாதனம் குறித்த எந்தவொரு தொடர்பையும் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

3) ஆகஸ்ட் 2019 – ஜனவரி 2020, அமெரிக்க சி.டி.சி (நோய் கட்டுபாட்டு மையம்) 12000 இறப்புகளை ஏற்படுத்தும் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான காய்ச்சல் பருவங்களுக்கு அமெரிக்கா தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது. மார்ச் 12, 2020 அன்று, சி.டி.சி இயக்குனர் சில COVID-19 இறப்புகள் “காய்ச்சல்” என தவறாகக் கண்டறியப்பட்டதாக ஒப்புக் கொண்டார், ஏனெனில் அவர்கள் மரணத்திற்குப் பின் சோதனைகள் செய்தபோது COVID-19 தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் மர்மமான புதிய வைரஸ் தொற்று நோய் ஒன்றால் 10,000 அமெரிக்க மக்கள் இறந்துள்ளதாகவும், ஏறத்தாழ 2கோடி மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் அவர்களில் 180,000 பேர் மருத்துவமனைகளில் உள்ளதாகவும் சில அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

4) அக்டோபர் 18 முதல் 27வரை, 2019, 2019 இராணுவ உலக விளையாட்டுக்கள் வுஹானில் நடைபெற்றது. அமெரிக்கா 350 விளையாட்டு வீரர்களை அனுப்பியது. இதில் ஃபோர்ட் டெட்ரிக்கில் பணிபுரிந்த வீரர்கள் சிலரும் அடங்குவர் என கூறப்படுகிறது மேலும் அவர்கள் தங்கி இருந்த பகுதி கொரோனா வைரஸ் தொற்று முதலில் வெளிபட்டதாக சொல்லப்படும் “ஹூவானான் சந்தை” பகுதிக்கு மிகவும் அருகாமையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

5) நவம்பர் 2019, சீன பத்திரிகைகள் மர்மமான தொற்று நோயால் பாதிக்கப்பட்ட ஐந்து வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் மருத்துவமனையில் இருந்து குணமாகி வெளியேற்றப்பட்டதாக செய்தி வெளியிட்டன.

6) நவம்பர் 2019, வூஹான் உள்ளூர்வாசிகள் COVID-19 உடன் கண்டறியப்பட்டனர், உள்ளூர் சமூக ஊடகங்களில் இதுபோன்ற சொற்கள் அதிகரித்தன. இது உலக ராணுவ விளையாட்டுக்குப் பிறகான வைரஸின் அடைகாக்கும் காலத்துடன் (INCUBATION PERIOD) ஒத்துப்போனது.

7) டிசம்பர் 1, 2019, வூஹானில் COVID-19 இன் முதல் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளி கண்டறியப்படுகிறார். இதையடுத்து 80000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவார்கள். மேலும் முதல் 41 நோயாளிகளில், 34% பேர் வனவிலங்கு சந்தையுடன் தொடர்புடையவர்கள் அல்ல.

8) ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் டேனியல் லூசி, நோய்த்தொற்றுக்கும் அறிகுறிகளுக்கும் இடையில் ஒரு அடைகாக்கும் நேரம் இருப்பதாலும், வனவிலங்கு சந்தையுடன் எந்த தொடர்பும் இல்லாத நோய்த்தொற்றுடையவர்கள் இருப்பதால், வைரஸ் வனவிலங்கு சந்தையிலிருந்து தோன்றியிருக்க முடியாது என்று கூறினார். ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிணாம உயிரியலாளர் கிறிஸ்டியன் ஆண்டர்சன் இந்த மதிப்பீட்டிற்கு அங்கீகாரம் அளித்து ஏற்றுக்கொண்டார்.

9) கடந்த 2019 செப்டம்பர் மாதம் ஒரு ஜப்பானிய தம்பதி அமெரிக்காவின் ஹவாயில் 10 நாட்கள் விடுமுறைக்கு சென்றனர். இரண்டாவது வாரத்தில் அவர்கள் நோய்வாய்ப்பட்டனர். ஜப்பானுக்குத் திரும்பியபோது அவர்கள் சோதனை செய்யப்பட்டு COVID-19 இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் தங்களது வாழ்நாளில் சீனாவிற்கு சென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன்னரே கொரோனா வைரஸ் தொற்று இருந்திருக்கலாம் என்பதை வலியுறுத்துகிறது.

10) COVID-19 இன் திரிபு சீனாவில் இருப்பதை விட வேறுபட்டது என்பதையும், வைரஸின் சுழற்சி அவ்வளவு சமீபத்தியதல்ல என்பதையும், இது பல வாரங்களாக கண்டறியப்படாமல் பரவி வருவதையும் இத்தாலி ஆய்வகம் உறுதிப்படுத்தியது.

11) சீனாவில் COVID-19 கண்டறியப்பட்டாலும், அது சீனாவிலிருந்து தோன்றியது என்று அர்த்தமில்லை என்று SARS ஐக் கண்டுபிடித்த சீனாவின் கொரோனா வைரஸ் நிபுணர் டாக்டர் ஜாங் நான்ஷன் கூறினார்.

12) மார்ச் 12, 2020 நிலவரப்படி, அமெரிக்கா 10000 பேரை மட்டுமே பரிசோதித்தது, அவர்களில் 1600 பேரில் COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒரு ஒப்பீட்டளவில், தென் கொரியா ஒரு நாளைக்கு 10000 பேரை சோதிக்கிறது, ஆனால் நோய் விகிதப் பாதை அமெரிக்காவைப் போன்றது. இது அமெரிக்காவில் ஏராளமான பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதை உணர்த்துகிறது ஆனால் அவர்கள் இன்னும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.

13) COVID-19 இன் மரபணு வகை மதிப்பீடு வைரஸின் 5 வகைகள் அல்லது விகாரங்கள் (குழு ABCDE) ஐ வெளிப்படுத்தியது. உலகின் பெரும்பாலான பிராந்தியங்களில் ஹூபே உள்ளடக்கம்
1 அல்லது 2 COVID-19 வகைகள் உள்ளன, (முக்கியமாக குழு C), மற்றும் இங்கிலாந்து (குழு D). ஆனால் அனைத்து 5 வகைகளையும் (குழு ABCDE) கொண்ட ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே. வைராலஜி 101 எனும் வைரஸ் விதிகளின்படி, அதிக மாறுபாடுகள் கொண்ட பகுதியே நோயின் பிறப்பிடமாகும்.

மேற்குறிப்பிட்ட அனைத்துமே அமெரிக்காவை தான் கொரோனா வைரஸின் பிறப்பிடமாக சுட்டிகாட்டுகிறது.

இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அமெரிக்கா இதனை தனது வீரர்களை அனுப்ப செய்ததா இல்லை வேறு ஏதெனும் வழிமுறையை மேற்கொண்டதா என்பது தெரியவில்லை.

மேலும் இத்தகைய குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மறுத்தாலும் அமெரிக்காவை முழுமையாக நம்பிவிட முடியாது,
அமெரிக்காவிற்கு உயிரியல் மற்றும் வேதியல் போர்முறை சோதனைகள் புதியது அல்ல, கடந்த காலங்களிலும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டு மறுப்பு தெரிவித்த நாடு தான் அமெரிக்கா.

வியட்நாம் போரில் “ஏஜென்ட் ஆரஞ்ச்” எனப்படும் களை அழிப்பான்கள், (2,4,5 ட்ரைக்ளோரோஃபீனோ அசிட்டிக் அமிலம் மற்றும் 2,4-D டைக்ளோரோ அசிட்டிக் அமிலம்) ஆகியவை கொண்ட கலவையை ஆபரேஷன் ரான்ச் ஹேண்ட் எனும் நடவடிக்கையில் வியட்நாம் மக்கள் மீது விமானங்கள் வாயிலாக தூவியது.

இந்த வேதிப்பொருளுக்கு நேரடியாக சுமார் 40லட்சம் மக்கள் வெளிப்படுத்தப்பட்டதாகவும், இதில் 30லட்சம் பேராவது பாதிக்கப்பட்டதாகவும் வியட்நாம் அரசு அறிக்கை கூறுகிறது மேலும் வியட்நாம் செஞ்சிலுவை சங்கம் சுமார் 10லட்சம் மக்கள் வரை மிக கடுமையான பாதிப்பு அடைந்ததாகவும் கூறியுள்ளது. இந்த தாக்குதல் போர்க்களத்தில் இருந்த அமெரிக்க ராணுவ வீரர்களையும் பாதித்துள்ளது. அமெரிக்க அரசு தரவுகளின்படி லுக்கெமியா, ஹாட்கீன்ஸ் லிம்ஃபோமா, பல்வேறு வகையான புற்றுநோய் பாதிப்புகள் அமெரிக்க வீரர்களிடம் இருந்துள்ளது மேலும் வியட்நாம் போரில் பங்கேற்ற அமெரிக்க வீரர்களின் குழந்தைகள் பிறக்கும் போதே குறைபாடுகளுடன் பிறந்துள்ளனர்.

இதை போலவே முதல் வளைகுடா போரில் அமெரிக்கா பயன்படுத்திய வேதியியல் தாக்குதல் முறை அமெரிக்க வீரர்களை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது மட்டுமின்றி அமெரிக்க மக்கள் மீதே அமெரிக்க அரசு பல முறை உயிரியல் மற்றும் வேதியியல் போர்முறைகளை சோதனை செய்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க ஒன்று 1949 முதல் 1969வரை சரியாக இருபது வருடங்களுக்கு தொடர்ந்து நடைபெற்ற சோதனைகள் தான், இதன் காரணமாக பல அமெரிக்கர்கள் நோய்வாய்ப்பட்டும் இறந்தும் உள்ளனர்.

தற்போது கொரோனா வைரஸ் கூட சீனாவின் மீதான தாக்குதலாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.