
தற்போது தேசம் ஒரு சோதனையான காலகட்டத்தில் உள்ளது, இந்த நேரத்தில் முப்படைகளும் கொரோனா வைரஸூக்கு எதிரான போராட்டத்தில் நாட்டு மக்களுக்கு உறுதுணையாக உதவிட வேண்டும் என ஜெனரல் பிபின் ராவத் கூறினார்.
தில்லியில் ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஜெனரல் பிபின் ராவத் “முப்படைகளும் தங்களது வழக்கமான கடமைகளை விட்டு தற்போது செயல்பட வேண்டும், அதற்கான காலம் வந்து விட்டது ஆகவே முப்படை வீரர்களும் இதற்கு தயாராக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
மேலும் கூறும்போது “ராணுவம் மக்களால் அரசு இயந்திரத்திற்கு புதிய மருத்துவ மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களை அமைத்தும் தனது சிறப்பு மருத்துவர்களை கொண்டும் உதவிட தயாராக உள்ளது” என்றார்.
இதுகுறித்து அரசின் பல்வேறு துறை அதிகாரிகளுடன் தான் தொடர்பில் இருப்பதாகவும், முப்படை அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார் மேலும் கொரோனா வைரஸை வீழ்த்த மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாத ஒன்று அவர்கள் ஒத்துழைக்கவில்லை எனில் இந்த ஊரடங்கு உத்தரவு தோல்வியில் முடியும் எனவும் கூறினார்