
ஞாயிற்றுக்கிழமை அன்று உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்படி ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் தலைநகர் தில்லியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதனடிப்படையில் தில்லி காவல்துறை , பஞ்சாப் மற்றும் மும்பை மாநகர காவல்துறை ஆகியவை உஷார்படுத்தப்பட்டுள்ளன.
காஷ்மீரை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் பல நாட்கள் முன்பே தாக்குதல் நடத்த காஷ்மீரை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை லேசாகவும் எடுக்க முடியாது காரணம் ஐ.எஸ் அமைப்பின் பத்திரிக்கைகளான “அல்-நாபா” மற்றும் “வாய்ஸ் ஆஃப் ஹிந்த்” ஆகியவற்றில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நமது எதிரிகள் மிகுந்த கவனம் செலுத்தி வரும் இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும்,
தற்போது உலக நாடுகள் முழுக்க ஒட்டுமொத்த பாதுகாப்பு கட்டமைப்பும் கொரோனாவில் கவனம் செலுத்தும் இச்சமயத்தை பயன்படுத்திகொள்ள வேண்டும், அதிக கூட்டநெரிசல் மிகுந்த ஒரு மருத்துவமனையை கூட தாக்கலாம்” என்ற கருத்துக்கள் நிறைந்த கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் ஆகும்.