பாலகோட் போன்ற எல்லை தாண்டிய தாக்குதல்களை மேற்கொள்ளும் திறனை தேஜஸ் மார்க்2 விமானம் கொண்டிருக்கும் !!

  • Tamil Defense
  • March 20, 2020
  • Comments Off on பாலகோட் போன்ற எல்லை தாண்டிய தாக்குதல்களை மேற்கொள்ளும் திறனை தேஜஸ் மார்க்2 விமானம் கொண்டிருக்கும் !!

உள்நாட்டு தயாரிப்பான தேஜாஸ் மார்க் II போர் விமானம், பாலகோட்டில் இந்திய விமானப்படை மேற்கொண்டது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனைக் கொண்டிருக்கும், மேலும் அதிக அளவிலான பார்வைக்கு அப்பாற்பட்ட ஏவுகணைகள் மற்றும் முடக்க முடியாத ஏசா ரேடாருடன் (JAM PROOF AESA RADAR) வயதாகி வரும் மிராஜ்2000 போர் விமானங்களுக்கு இணையான அல்லது பொருத்தமான மாற்றாக இருக்கும் என தேஜாஸ் மார்க்2 விமானத்தின் வளர்ச்சியை மேற்பார்வையிடும் நிறுவனம் கூறுகிறது. கனரக GE 414 எஞ்சின் பொருத்தப்பட்ட மார்க் II, 2022 ஆம் ஆண்டில் வெளிவந்து, 2023 இல் சோதனைக்குச் சென்று 2026 க்குள் இந்திய விமானப்படையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாயன்று, தேஜாஸ் மார்க்1 இன் முழு செயல்பாட்டு கட்டமைப்பில் திருப்தி அடைந்த ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சியின் திட்ட இயக்குநர் (போர் விமானங்கள் பிரிவு) கிரிஷ் தியோதர் கூறும்போது “தேஜாஸ் மார்க்2 அதன் முன்னோடடியான மார்க்1 விட இரு மடங்கு தாக்குதல் வரம்பைக் கொண்டிருக்கும் என்றும் அஸ்த்ரா2 BVR Air – Air ஏவுகணைகள் பொருத்தப்படும் என்றும் கூறினார். இவற்றின் தாக்குதல் வரம்பு சுமார் 150 கி.மீ ஆகும்.

“தேஜாஸ் மார்க்1 இந்திய எல்லைக்குள் ரோந்துக்காக இருக்கும்போது, ​​மார்க்2 விமானங்கள் பால்கோட் போன்ற தாக்குதல்களை எதிரி பிரதேசத்தில் நடத்தும் திறன் கொண்டிருக்கும், ஏனெனில் இது கிரிஸ்டல் மேஸ் மற்றும் ஸ்பைஸ் ஏவுகணைகள் போன்ற கனரக தொலைதூர ஆயுதங்களை கொண்டு செல்லும்” என்று தியோதர் கூறினார்.

கடந்த பிப்ரவரி 26, 2019 அன்று, புல்வாமாவில் மத்திய ரிசர்வ் காவல்படை கான்வாய் மீது பயங்கரவாதக் குழு நடத்திய தற்கொலை வெடிகுண்டு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மன்ஷெராவின் பாலகோட்டில் உள்ள ஜப்பா டாப்பில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாமை குறிவைத்து இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 விமானங்கள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தற்போது மார்க்2 இன் பணிகள் விரைவாக நடந்து கொண்டிருக்கையில், ஏ.டி.ஏ (A.D.A) இந்திய விமானப்படை உடன் கலந்தாலோசித்து அடுத்த மூன்று மாதங்களில் அதன் இரட்டை என்ஜின் மேம்பட்ட நடுத்தர போர் விமானத்தின் (AMCA) வடிவமைப்பையும் முடக்கும். மேலும் இந்திய விமானப்படை, கடந்த நவம்பரில் DRDOவுக்கு அதன் தாக்குதல் திறன்களை வலுப்படுத்த ஐந்தாம் தலைமுறை AMCA விமானத்தை வாங்குவோம் என எழுத்துப்பூர்வ உறுதிப்பாட்டைக் கொடுத்தது. AMCA 2024 ஆம் ஆண்டில் உருவாகி அடுத்த ஆண்டில் பறக்க தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேஜஸ் மார்க்2 விமானத்தை பொறுத்தவரை, ADA அதன் தாய் நிறுவனமான DRDOவுடன் இணைந்து முழுக்க உள்நாட்டு முயற்சியில் (AESA – Active Electronically Scanned Array Radar) ரேடார் ஒன்றை உருவாக்கி வருகிறது, இதை கண்டறிவது மிக கடினம் மேலும் சண்டையின் போது எதிரிகளால் முடக்க முடியாத அளவுக்கு அதிக எதிர்ப்பை திறனை கொண்டுள்ளது. இப்போதைக்கு, தேஜாஸ் மார்க்1 இஸ்ரேலிய டெர்பி BVR ஏவுகணைகளுடன் மேம்பட்ட வரம்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, இதனால் எதிரி விமானங்கள் இந்திய எல்லையை கடக்கும்போது கூட அவை இலக்கு வைக்கப்படுகின்றன.

தேஜாஸ் எம்.கே II என்பது 4.5 தலைமுறை விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.