தேஜாஸ் இறுதி வடிவ விமானம் (TEJAS FOC) தேஜாஸ் தொடக்க வடிவ விமானத்தை (TEJAS IOC) விட சிறந்தது , எப்படி ?? எதனால் ??
1 min read

தேஜாஸ் இறுதி வடிவ விமானம் (TEJAS FOC) தேஜாஸ் தொடக்க வடிவ விமானத்தை (TEJAS IOC) விட சிறந்தது , எப்படி ?? எதனால் ??

HAL நிறுவனம் சமீபத்தில் TEJAS FOC விமானத்தின் சோதனையை நடத்தியது. இச்சோதனையில் HAL நிறுவனத்தின் தலைமை சோதனை விமானியான ஏர் கமோடர் கே.ஏ. முத்தண்ணா விமானத்தை சுமார் 40நிமிடங்களுக்கு இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

HAL அதிகாரிகள் கூறும்போது TEJAS IOC விமானத்தின் செயல்பாட்டில் கிடைக்கப்பெற்ற அனுபவங்களை வைத்து நிறைய மாற்றங்களை செய்து தான் TEJAS FOC உருவாக்கப்பட்டுள்ளது என்றனர்.

ஏற்கனவே கோவை சூலூர் விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள 45 படையணியின் 16 TEJAS IOC விமானங்களுடன் கூடுதலாக 18ஆவது படையணி நிலைநிறுத்தப்படும் அந்த படையணியில் 16 TEJAS FOC விமானங்கள் இடம்பெறும், மேலும் எதிர்காலத்தில் 45ஆவது படையணியின் TEJAS IOC விமானங்கள் TEJAS FOC தரத்திற்கு மேம்படுத்தப்படும்.

இனி எப்படி TEJAS FOC , TEJAS IOCஐ விட சிறந்த விமானமாகிறது என பார்க்கலாம்.

RANGE:
TEJAS IOCயின் பெருத்த பின்னடைவாக கருதப்படுவது அதன் இயக்க வரம்பு தான் காரணம் 2000லிட்டர் எரிபொருளை இரு தொட்டிகளில் நிரப்ப முடியும், ஆனால் TEJAS FOCயில் கூடுதலாக 725லிட்டர் எரிபொருள் நிரப்ப முடியும்.

MID AIR REFUELLING:

TEJAS IOC விமானத்தால் நடுவானில் எரிபொருள் நிரப்பிக்கொள்ள முடியாது ஆனால் TEJAS FOC விமானத்தால் நடுவானில் எரிபொருள் நிரப்பி கொள்ள முடியும் ஆகவே இயக்க வரம்பு பன்மடங்கு அதிகரிக்கிறது.

AUTO CANNON:

TEJAS FOC விமானம் 23மிமீ அளவுள்ள இருகுழல் தானியங்கி Gsh23 துப்பாக்கியை சுமக்கும். இது வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

BVR MISSILES:

TEJAS FOC விமானம் சுமார் 110கிமீ தாக்குதல் வரம்பு கொண்ட அஸ்திரா BVR ஏவுகணையை சுமந்து செல்லும், தற்போது TEJAS IOC விமானங்கள் இஸ்ரேலிடமிருந்து வாங்கப்பட்ட 50கிமீ தாக்குதல் வரம்பு கொண்ட டெர்பி BVR ஏவுகணைகளை சுமக்கின்றன.

AGILITY:

TEJAS FOC விமானத்தின் கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன இதன் காரணமாக இதனால் சுலபமாக சுமார் 3G முதல் 8G வேகம் வரை (Maneuver) லாவகமாக பறக்க செய்ய முடியும். குறிப்பாக ஒரு ஏவுகணை தாக்க வரும்போது அசாத்தியமாக 8G வேகத்தில் விமானத்தை லாவகமாக ஓட்டி தப்பிக்க முடியும்.