Breaking News

இந்தியாவின் நீர்மூழ்கி திட்டத்தில் கலந்து கொள்ளும் ஸ்பெயின் !!

  • Tamil Defense
  • March 29, 2020
  • Comments Off on இந்தியாவின் நீர்மூழ்கி திட்டத்தில் கலந்து கொள்ளும் ஸ்பெயின் !!

ஸ்பானிய கப்பல் கட்டுமான நிறுவனமான நவன்ஷியா (NAVANTIA) இந்திய கடற்படைக்கு 6 நீர்மூழ்கி கப்பல்களை விற்பது தொடர்பாக தொழில்துறை கூட்டம் ஒன்றை ஏப்ரல்21 அன்று நடத்த இருக்கிறது.

ஐரோப்பாவின் 5ஆவது பெரிய கட்டுமான நிறுவனமான நவன்ஷியா இந்திய கடற்படையின் பிராஜெக்ட்75ஐ நீர்மூழ்கி கப்பல் திட்டத்திற்கு தனது எஸ்80 (S80) ரக நீர்மூழ்கியை தர உள்ளது. இத்திட்டத்தில் ஆறு கப்பல்கள் வாங்கப்படும் அவை நெடுந்தூரம் செல்லக்கூடியவையாகவும் நிலநீர் தாக்குதல் ஏவகணைகளை சுமக்க கூடியவையாகவும் இருத்தல் வேண்டும் என்பது அத்தியாவசியம்.

நவன்ஷியா நிறுவன வட்டாரங்கள் கூறும்போது “இந்திய கடற்படையின் கோரிக்கைகள் படி போட்டியில் உள்ள 6நிறுவனங்களின் தயாரிப்புகளில் எங்களுடைய தயாரிப்பு தான் மிக நெருக்கமாக இந்திய கடற்படையின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது, மேலும் எங்களது எஸ்80 ரக கப்பலானது உலகளவில் 3000டன்களுடன் (AIP – Air Independent Propulsion) காற்றில்லா இயங்குமுறை திறன் கொண்டது என்கின்றனர். இத்தொழில்நுட்பமானது இக்கால நீர்மூழ்கி கப்பல்களுக்கு மிக தேவையான ஒன்று காரணம் சாதாரண டீசல் என்ஜின் நீர்மூழ்கி கப்பல்கள் தொடர்ந்து இயங்க நீரின் மேற்பரப்பு அல்லது அதற்கு அருகில் வர வேண்டும் இது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். எனவே மேற்குறிப்பிட்ட தொழில்நுட்பம் இத்தேவையின்றி கப்பல் இயங்க வழிவகுக்கும்.

இந்த வகை கப்பல்களில் பயன்படுத்தப்படும் AIP அடிப்படையிலான FUEL CELL பயோஎத்தனால் (BIO ETHANOL) மற்றும் ஆக்ஸிஜனை (OXYGEN) உபயோகித்து ஹைட்ரஜன் (HYDROGEN)வாயுவை உற்பத்தி செய்து அதிலிருந்து மின்சாரம் தயாரித்து கப்பல் இயங்க உதவி செய்கிறது. நவன்ஷியா நிர்வாகம் குறிப்பிடும் போது எஸ்80 நீர்மூழ்கி கப்பலானது சுமார் 3 வாரங்கள் வரை தொடர்ந்து நீருக்கடியில் இருக்கும் திறன் கொண்டது என்கிறார்கள்.

வருகிற ஏப்ரல் 21 அன்று தில்லியில் நவன்ஷியா நடத்தும் தொழிற்துறை கூட்டத்தில் சுமார் 200 இந்திய நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாகவும் அவை அனைத்தும் இக்கப்பலின் கட்டுமானத்திலும் சுதேசி திறன் அதிகரிப்பிலும் ஈடுபட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நவன்ஷியா நாம் ஃபிரான்ஸிடமிருந்து வாங்கிய ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்களின் கட்டுமானத்தில் பங்குபெற்றது குறிப்பிடத்தக்கது.