விடுமுறை முடிந்து இராணுவம் திரும்பும் வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு-அதிகாரிகளை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தல்

  • Tamil Defense
  • March 25, 2020
  • Comments Off on விடுமுறை முடிந்து இராணுவம் திரும்பும் வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு-அதிகாரிகளை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தல்

சீனாவின் வுகானில் கொரானா குண்டு வெடித்து மூன்று மாதங்கள் ஆன பிறகு தற்போது வரை கொரானா பரவும் வீரியம் குறைந்தபாடில்லை.இந்தியாவில் இந்த கொரானாவை ஒழிக்க இந்தியாவை வழிநடத்துவது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தான்.அவர்களின் முதல் நம்பிக்கையும் நமது இராணுவம் தான்.

மானேசரில் முதல் காரண்டைன் முகாம் அமைத்தது முதல் தற்போது அவற்றின் எண்ணிக்கையையும் முப்படைகள் அதிகரித்து வருகின்றன.விடுமுறையில் இருந்து இராணுவத்திற்கு திரும்பிய 34 வயது இராணுவ வீரர் ஒருவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.தற்போது விடுமுறையில் இருக்கும் வீரர்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இராணுவ வீரர்களின் நகர்வும் , நேரடியாக பொதுமக்களிடம் தொடர்பு கொள்ளவும் அதிக தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.மேலும் விழிப்புணர்வு பணிகளில் வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

விடுமுறையில் இருந்து பணிதிரும்பும் வீரர்கள் 14 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்தப்படுவர் என இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானப்படை தளங்களும் தற்போது மூடப்பட்டுள்ளன.பொதுமக்கள் தளங்களில் உள் நுழைய முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.வீரர்கள் தளத்தில் உள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.