
சௌதி அரேபியாவிற்கு பிறகு உலகின் இரண்டாவது பெரிய இராணுவ தளவாட இறக்குமதி நாடாக இந்தியா உள்ளது.அதே நேரம் ஏற்றுமதி எனும் வரும் போது 25வது இடத்தில் இருந்து 23வது இடத்திற்கு முன்னேறி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.இந்தியா தற்போது மியான்மர்,ஸ்ரீலங்கா மற்றும் மொரிசியஸ் நாடுகளுக்கு இந்தியா தற்போது ஏற்றுமதி செய்து வருகிறது.
ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட தகவல்படி உலக ஆயுத இறக்குமதியில் இந்தியா 2015-19 கால அளவில் 9.2% ஆயுதம் இறக்குமதி செய்துள்ளது.அதே நேரம் 12% ஆயுத இறக்குமதி செய்து சௌதி அரேபியா முதலிடத்தில் உள்ளது.இதில் சீனா ஐந்தாம் இடத்திலும் ,பாகிஸ்தான் 11வது இடத்திலும் உள்ளது.
இரஷ்யா தான் இன்னும் இந்தியாவிற்கு அதிக அளவிலான ஆயுதங்கள் ஏற்றுமதி செய்துவரும் வேளையில் ,அமெரிக்கா இரண்டாம் இடத்தில் இருந்தது.ஆனால் தற்போது இந்தியா இஸ்ரேல் மற்றும் பிரான்சிடம் இருந்து தற்போது அதிக அளவு இறக்குமதி செய்து வருகிறது.
ஆனால் மறுபுறம் ஏற்றுமதியில் குறிப்பிடத் தக்க அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.2015-16 காலக்கட்டத்தில் 2060 கோடிகளாக இருந்த ஏற்றுமதி தற்போது 2018-19களில் 10746 கோடிகளாக அதிகரித்துள்ளது.அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5பில்லியன் டாலர்கள் ஏற்றுமதி செய்வதே அரசின் இலக்காக உள்ளது.