புதிய ஏஇஎஸ்ஏ ரேடார் உடன் மிக்-35 விமானத்தை இந்தியாவிற்கு விற்க இரஷ்யா முயற்சி

  • Tamil Defense
  • March 29, 2020
  • Comments Off on புதிய ஏஇஎஸ்ஏ ரேடார் உடன் மிக்-35 விமானத்தை இந்தியாவிற்கு விற்க இரஷ்யா முயற்சி

மார்க்ஸ் 2019 சர்வதேச கண்காட்சியின் போது முதல் முறையாக புதிய ஏஇஎஸ்ஏ ரேடார் உடன் புதிய மிக்-35 விமானத்தை இரஷ்யா காட்சிபடுத்தியிருந்தது.

புதிய Phazotron-NIIR Zhuk-AME AESA ராடாரை 2019 முதலே இரஷ்யா சோதித்து வருகிறது.தற்போது சோதனையில் இருக்கும் இந்த புதிய ரேடார் பொருத்தப்பட்ட மிக்-35 விமானம் 2021வாக்கில் தான் தயாரிப்புக்கு உள்ளாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

160கிமீ முதல் 180கிமீ வரை இலக்குகளை கண்காணிக்க வல்லது.30 இலக்குகளை ஒரே நேரத்தில் கண்காணித்து 6 இலக்குகளை ஒரே நேரத்தில் தாக்க வல்லது இந்த புதிய AESA ரேடார்.

இந்த விமானத்தை தான் இரஷ்யா இந்தியாவிற்கு விற்க முயற்சிக்கிறது.இந்த புதிய ரேடார் உடன் மேம்படுத்தப்பட்ட electronic warfare system இந்த விமானம் பெற்றிருக்கும் எனவும் தவிர automatic control system என்ற புதிய அமைப்பும் இந்த விமானத்தில் இருக்கும் எனவும் மிக் கார்பரேசன் கூறியுள்ளது.

இரஷ்யா பெற உள்ள மிக்-35 விமானங்களை விட இந்தியாவிற்கு ஆபர் செய்யப்படும் விமானம் நவீனத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.