இந்திய கடற்படைக்கு மறுபடியும் மிக்29 விமானங்களை விற்க முனைப்பு காட்டும் ரஷ்யா !!

  • Tamil Defense
  • March 18, 2020
  • Comments Off on இந்திய கடற்படைக்கு மறுபடியும் மிக்29 விமானங்களை விற்க முனைப்பு காட்டும் ரஷ்யா !!

110 போர் விமானங்களை வாங்குவதற்கான இந்தியாவின் டெண்டரில் பங்கேற்க மாஸ்கோவுக்கு ஒரு வலுவான வாய்ப்பு உள்ளது, இது விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெண்டரில் ரஷ்ய தரப்பு தனது மிக் -35 போர் விமானங்களுடன் பங்கேற்க திட்டமிட்டதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

தற்போது, ​​இந்தியா ஒரே ஒரு விமாந்தாங்கி கப்பலை மட்டுமே இயக்குகிறது. அந்த முன்னாள் சோவியத் கப்பலான விக்ரமாதித்யா, ரஷ்யாவால் தயாரிக்கப்பட்ட மிக் -29 கே போர் விமானங்களை ஏற்றிச் செல்கிறது. எவ்வாறாயினும், உள்நாட்டில் கட்டப்படும் இந்தியாவின் இரண்டாவது விமாந்தாங்கி கப்பலானது மார்ச் 2021 க்குள் இயக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
விக்ரமாதித்யா 45 மிக் -29 கே விமானங்களைக் கொண்டுள்ள நிலையில், இந்தியா 57 புதிய கடற்படை போர் விமானங்களை வாங்க விரும்புகிறது.

யூரேசியன் டைம்ஸ் முன்னர் அறிவித்தபடி, ரஷ்ய விமானத் துறை ஊடகங்களில் “மிக் -29 கே வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கோரிக்கைகாக ரஷ்யா காத்திருக்கிறது.” டெக்கில் நிலைநிறுத்தும் வகையிலான போர் விமானங்களை வழங்குவதற்காக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்னும் டெண்டரை வெளியிடவில்லை, ஆனால் 2017 ஆம் ஆண்டில், இது குறித்து அமைச்சகம் அடிப்படை விசாரணையை மேற்கொண்டது.

மிக் -29 கே விமானமானது
4+ தலைமுறை ரஷ்ய போர் விமானமாகும், இது பல செயல்பாட்டு திறன் கொண்ட ரேடார்,
மற்றும் போயிங்கைப் போலவே, ஹேண்ட்ஸ் -ஆன்-த்ரோட்டில்-அண்ட்-ஸ்டிக் (Hands On Throttle And Stick – HOTAS) கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது.

இது வான் – வான் ஏவுகணைகளையும், மேலும் RVV-AE ஒருங்கிணைப்பின் காரணமாக, இது கப்பல் எதிர்ப்பு மற்றும் ரேடார் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் பல மேற்பரப்பு தாக்குதல்களை மேற்கொள்ளும் துல்லியமாக வழிகாட்டும் ஆயுதங்களையும் சுமந்து செல்லும்.