
தலிபான்கள் வட்டாரத்தில் இருந்து ஆஃப்கன் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ மிகப்பெரிய அளவில் தலிபான்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நபர் இப்படி எழுதுகிறார் ” நான் கத்தாருக்கு சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு இருந்தேன். ஆனால் அங்கு சென்ற போது நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ தலிபான்களை ஆட்டிபடைத்து கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. கத்தாரில் உள்ள தலிபான்களின் அரசியல் பிரிவு தலைவரான பராதர் வெளியுலக முகம் ஆனால் அவரது அலுவலகம் பாகிஸ்தான் கட்டுபாட்டில் இருந்தது. தலிபான்களின் ஒவ்வொரு முடிவு, நகர்வு , பேச்சு என அனைத்துமே ஐ.எஸ்.ஐ திட்டப்படி அரங்கேறியது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும்ஆஃப்கன் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கத்தாரில் உள்ள தலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் அனைத்து பணியாளர்களும் ஐ.எஸ்.ஐ ஆல் கட்டுப்படுத்தபட்டதாகவும் அவர்கள் சர்வ சாதாரணமாக கத்தாரில் அமைந்துள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடமாடியதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த நபர் குறிப்பிடும்போது “தலிபான்கள் தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்துக்கொண்டனர்” என்கிறார்.
மேலும் அமெரிக்காவுடனான தலிபான்களின் சமாதான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தியதாக வெளிபடுத்துகிறார்.
முதலில் அந்த ஒப்பந்தத்தில் ஷேர் மொஹம்மது அப்பாஸ் ஸ்டானிக்ஸாய் என்பவர் தலிபான்களின் சார்பில் கையெழுத்திடுவதாக இருந்தது ஆனால் தீடிரென பராதர் என்பவரை அவருக்கு பதிலாக ஐ.எஸ்.ஐ கையெழுத்திட அனுப்பியது என்கிறார்.
இதற்கு காரணமாக ஸ்டானிக்ஸாய் அவர்கள் ஐ.எஸ்.ஐ ஜெனரல் ஆசிம் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் முந்தைய காலங்களில் இந்தியாவில் பயிற்சி பெற்று ஆஃப்கன் ராணுவத்தில் பணியாற்றியதாகவும் அதனால் அவருக்கு பதிலாக பராதரை ஐ.எஸ.ஐ கையெழுத்திட அனுப்பியதாகவும் அந்த நபர் வெளிபடுத்துகிறார்.
இந்த ஐ.எஸ்.ஐ ஜெனரல் ஆசிம் மூனிர் தான் புல்வாமா தாக்குதலின் சூத்திரதாரி என்பதை அச்சமயத்தில் நமது பக்கத்தில் ஆதாரங்களுடன் பகிர்ந்திருந்தோம்.
ஆகவே தலிபான்களை வைத்து பாகிஸ்தான் ஆஃப்கானிஸ்தானத்தில் இந்தியாவுக்கு எதிராக காய்நகர்த்தி வருவதை இச்செய்தி வெளிப்படுத்துகிறது.