
அமெரிக்க விமானப்படை ஏப்ரல் 30 முதல் மே15 வரை அலாஸ்காவில் நடைபெற இருந்த RED FLAG போற்பயிற்சியின் முதல்கட்டம் கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்த வருட பயிற்சிக்கு இந்திய விமானப்படை தனது சு30 விமானங்களை அனுப்புவதாக இருந்தது. இந்த பயிற்சியில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இந்திய விமானப்படை பங்கு பெற்று வந்தாலும் அதிக செலவு காரணமாக அனைத்து வருடமும் கலந்து கொள்ளமாட்டோம் என கூறியிருந்தது. இதுவரை இந்திய விமானப்படை இந்த பயிற்சிக்கு தனது சுகோய்30, ஜாகுவார், ஐ.எல்.78 டேங்கர்கள் மற்றும் ஸி17 ரக விமானங்களை அனுப்பி இருந்தது.
இந்த பயிற்சியானது மிகுந்த தத்ருபமான முறையில் போர் சூழலை உருவாக்கி பயிற்சி மேற்கொள்ள உதவுகிறது. இந்த வகையில் இப்போர் பயிற்சி தனித்துவமானது, சிறப்புமிக்கது ஆகும்