
கொரானா பாதிப்பு இந்தியாவை கொடூரமாக தாக்க தொடங்கியுள்ளது.படித்தும் சில முட்டாள்களாலும் மக்களின் அலட்சியத்தாலும் கொரானா கட்டுக்குள் இருப்பதை பாதிப்பாக்கி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் சென்னை,காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள.மேலும் இந்தியாவில் 75 மாவட்டங்கள் மொத்தமாக மூடப்பட்டுள்ளன.வரும் மார்ச் 31ம் தேதி இந்த கட்டுப்பாடு தொடரும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு மீண்டும் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதனை பொருட்படுத்தாமல் அலட்சியமாக உள்ளனர் என தனது கவலையை வெளிப்படுத்துள்ளார்.
கொரோனா நிலவரத்தின் தீவிரத்தை மக்கள் உடனடியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அலட்சியப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள நகரங்களில் விதிகள், சட்டங்களை கடுமையாக மக்கள் பின்பற்றுவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்துதல் வேண்டும் என மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் அனைவரும் சுய தனிமைப்படுத்ததுல் செய்தல் வேண்டும்.கூட்டமாக கூடுதல் மற்றும் அது போன்ற விழாக்களில் கலந்து கொள்ளுதலில் தவிர்க்க வேண்டும்.இது எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளமால் இதன் தீவிரத்தை மக்கள் புரிந்து நடத்தல் வேண்டும்.
சாதாரண காய்சசல் மற்றும் சளி இருந்தால் கூட தயங்காமல் உங்களை தனிமைப்படுத்தி அருகே உள்ளே மருத்துவமனையை அணுக வேண்டும்.
மறக்காமல் இந்த பதிவை அதிகமாக பகிரந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.