அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரை தாக்க முயன்ற பாகிஸ்தான் விமானப்படை !!

  • Tamil Defense
  • March 19, 2020
  • Comments Off on அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரை தாக்க முயன்ற பாகிஸ்தான் விமானப்படை !!

2011ஆம் ஆண்டு மே மாதம் ஒசாமா பின்லேடனை பாக்கிஸ்தானின் அபோட்டாபாத்தில் கொல்லும் பணியை முடித்துவிட்டு அங்கிருந்து அமெரிக்க கடற்படை சீல் வீரர்களை ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்திற்கு சுமந்து சென்ற

எம்.எச் -47 சினூக் கனரக உலங்கு வானூர்தியை (சிறப்பு நடவடிக்கை மற்றும் பல்திறன் தாக்குதல் ரகம்) அமெரிக்க ராணுவத்தின் 160ஆவது சிறப்பு நடவடிக்கைகள் வான்பிரிவு ரெஜிமென்ட்டை சேர்ந்த விமானி டவ்க் எங்லன் ஓட்டி சென்றார். அப்போது அவரது உலங்கு வானூர்தியை பாகிஸ்தான் விமானப்படையின் எஃப் -16 போர் விமானம் குறைந்தபட்சம் 3 தடவைகள் நெருங்கிய தூரத்தில் தாக்க முயன்றுள்ளது தற்போது வெளிவந்துள்ளது.

பாகிஸ்தானிய எஃப் -16 விமானங்கள் துரத்தியது ஆச்சரியம் அளிக்கவில்லை என்றும், அதைத் எதிர்பார்த்ததாகவும், அதற்கான திட்டம் வகுத்து எந்த ஏவுகணை ஏவுதலையும் வெற்றிகரமாக தோற்கடிக்க சினூக் ஹெலிகாப்டர்களில் எலக்ட்ரானிக் போர் அமைப்பு பொருத்தப்பட்டதாகவும் எங்லன் கூறினார்.

மேலும் அவர் கூறும்போது ”இது ஒரு மின்னணு சண்டை, ஒரு ஏவுகணை கூட அதன் இடத்தை விட்டு வெளியேறவில்லை. எனவே நான் அவரை மின்னணு முறையில் தவிர்க்க முடிந்தது. ஆனால், அவர் என்னைத் தேடி தாக்க முயன்றார், மூன்று முறை ஏவுகணையை ஏவுவதற்கு மிக அருகில் வந்தார், ”என்று எங்லன் கூறினார். ஒவ்வொரு வகையான நுட்பமும், தந்திரோபாயமும் பயன்படுத்தப்பட்டதாகவும், எஃப் -16 ரேடார் வரம்பில் இருந்து விலகி இருக்க பூமிக்கு மிக அருகில் தாழ்வாக பறப்பதும் அவற்றில் ஒன்று என்றும் எங்லன் கூறினார்.

சில பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கையில், எஃப் -16 களில் இருக்கும் பேக்ரூம் அமைப்பு காரணமாக அமெரிக்க மற்றும் நேட்டோ வகைப்படுத்தப்பட்ட விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களை பாகிஸ்தான் எஃப் -16 ராடார் கண்டுபிடிக்க முடியவில்லை, அத்தகைய இலக்குகளை தாக்குவதை இது தடுக்கிறது, மேலும் எலக்ட்ரானிக் ஜாம்மிங் முக்கிய பங்கு வகித்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.