சீனாவின் உதவியுடன் ஏவுகணை மேம்படுத்தி சோதனை செய்த பாக்-இரண்டு முறையும் தோல்வியை சந்தித்த பரிதாபம்

  • Tamil Defense
  • March 23, 2020
  • Comments Off on சீனாவின் உதவியுடன் ஏவுகணை மேம்படுத்தி சோதனை செய்த பாக்-இரண்டு முறையும் தோல்வியை சந்தித்த பரிதாபம்

தரையில் இருந்து ஏவப்படும் 750கிமீ தொலைவு செல்லக்கூடிய பாபர் 2 எனும ஏவுகணை திட்டம் படுதோல்வியை அடைந்துள்ளது.கடந்த மார்ச் 19 அன்று பலுசிஸ்தான் சோதனை தளத்தில் இருந்து பாக்கிஸ்தான் இந்த ஏவுகணையை சோதனை செய்துள்ளது.ஏவுகணை ஏவப்பட்ட அடுத்த இரண்டு நிமிடத்தில் ஏவுகணை விபத்தை சந்தித்துள்ளது.

பாக்கில் இருந்து வெளிவரும் தகவல்படி இது இரண்டாவது தொடர் தோல்வி ஆகும்.இதற்கு முன் ஏப்ரல் 10,2018ல் பாபர் சப்சோனிக் ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.அப்போதும் அது தோல்வியையே சந்தித்துள்ளது.

இந்தியாவின் 1000கிமீ செல்லும் நிர்பயா ஏவுகணைக்கு இணையாக முதல் முகாலய பேரரசர் பாபர் என்பவரின் பேரில் சீனாவின் உதவியுடன் இந்த பாபர் ஏவுகணையை பாக் மேம்படுத்தி வந்தது.

இரு ஏவுகணைகளுமே தரைப்பகுதியை ஒட்டி பறக்கும் திறன் மற்றும் sea skimming திறன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

நமது நிர்பயா ஏற்கைவே ஆறுமுறை சோதனை செய்யப்பட்டுள்ளது.கடைசி சோதனை அதன் மேம்பாட்டு குறிக்கோளை உறுதிப்படுத்தும் வண்ணம் சோதனை செய்யப்பட்டது.

இந்த பாபர் 2 ஏவுகணையை சோதனை செய்வதற்கு முன்பு பாக் அறிவியலாளர் குழு சீனா சென்றதாக கூறப்படுகிறது.ஏற்கனவே பாபர் 1 எனப்படும் 700கிமீ செல்லும் ஏவுகணையை பாக் தனது படையில் இணைத்துள்ளது.