பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல் !!

நேற்று ஜம்முவின் கத்துவா மாவட்டம் ஹிராநகர் செக்டாரில் சர்வதேச எல்லையருகே பாகிஸ்தான் ரேஞ்சர்கள் தாக்குதல் நடத்திய நிலையில் இன்று காலையில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மேந்தார் செக்டாரில் எல்லை கட்டுபாட்டு கோடு பகுதியில் மோர்ட்டார்களை கொண்டு பாக் ராணுவம் இந்திய நிலைகளை தாக்கியுள்ளது.

இந்திய ராணுவமும் பாகிஸ்தான் வீரர்களை கடுமையாக திருப்பி தாக்கியுள்ளது.

ஜனவரி1 முதல் ஃபெப்ரவரி23 வரையிலான காலகட்டத்தில் மட்டுமே 646 அத்துமீறிய தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தியுள்ளது.

கடந்த 2019ஆம் அண்டில் 3,200 தாக்குதல்களை பாகிஸ்தான் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.