
பாலக்கோட் தாக்குதலின் முதல் வருட கொண்டாட்டத்தில் பேசிய விமானப்படை தளபதி பதாரியா அவர்கள் இந்தியா சொந்தமாக மேம்படுத்தியுள்ள அஸ்திரா மார்க் 1 கண்ணுக்கு அப்பால் வரும் இலக்குகளை தாக்க வல்ல வான்-வான் ஏவுகணை அமெரிக்காவின் AIM-120C-5 ஏவுகணையின் திறனுக்கு இணையானது என தளபதி தெரிவித்துள்ளார்.
மேலும் அஸ்திராவை சுகாய் விமானத்தில் இணைப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.இந்த அஸ்திரா ஏவுகணை உண்மையான ஆபத்துக்களை எதிர்கொள்ளும் அளவிற்கு பலவித சோதனைகளுக்கு உள்ளாகப்பட்டுள்ளது.
பாலக்கோட் தாக்குதலின் போது சுகாய் விமானங்கள் இரஷ்யாவின் R-77 ஏவுகணை தான் வைத்திருந்தது.இது பாக்கின் எப்-16ஐ தாக்கும் அளவிற்கு நீண்ட தொலைவு செல்ல முடியவில்லை.அதே நேரம் பாக் வைத்திருந்த AMRAAM ஏவுகணைகளின் எல்லைக்குள் நமது சுகாய் விமானங்கள் வந்த காரணத்தால் ஐந்து ஆறு ஏவுகணைகளை நமது சுகாய் மீது பாக் எப்-16 ஏவியது.
பெரிய இலக்குகளுக்கு எதிராக 105கிமீ தூரமும் வளைந்து நெளிந்து செல்லும் இலக்குகளுக்கு எதிராக 60கிமீ துரமும் இந்த AIM-120C-5 ஏவுகணை தாக்கும்.