ஆபரேஷன் ஷக்தி – இனி திரும்ப சோதனை இல்லை !!

  • Tamil Defense
  • March 30, 2020
  • Comments Off on ஆபரேஷன் ஷக்தி – இனி திரும்ப சோதனை இல்லை !!

கடந்த மார்ச் 27 அன்று பிரதமர் மோடி ஆபரேஷன் ஷக்தி என்ற பெயரில் செயற்கைகோள் எதிர்ப்பு சோதனை நடத்தியதாக அறிவித்தார்.

இந்த சோதனை மூலம் இந்தியா அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் நான்காவது விண்வெளி சக்தியாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனை ராணுவ வல்லுநர்களால் விண்வெளியை ராணுவமயமாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக பார்க்கப்பட்டது. எனினும் தற்போது பேரழிவு ஆயுதங்களை வைத்துள்ள நாடுகளில் மிக பொறுப்பானதாகவும், நம்பகத்தன்மை மிகுந்ததாகவும், மூர்க்கத்தனம் இல்லா நாடாகவும் இந்தியா பார்க்கப்படுகிறது.

சீனா இத்தகைய சோதனையை 800கிமீ உயரத்தில் நடத்தியது இன்றும் அச்சோதனையின் காரணமாக சிதைவுகள் அங்கு இருக்கின்றன் ஆனால் நாம் நடத்திய சோதனை 200கிலோமீட்டர் உயரத்தில் நடத்தப்பட்டது ஆகையால் புவி ஈர்ப்பு விசை அந்த சிதைவுகளை விண்வெளியில் தங்காமல் பார்த்துக்கொண்டது.

DRDO தலைவர் கூறும்போது இச்சோதனையை திரும்ப நடத்துவது என்பது அரசின் முடிவை சார்ந்தது ஆனால் தற்போது வரை நாங்கள் அதற்கான எந்த அறிவுறுத்தலையும் அரசிடமிருந்து பெறவில்லை என்றார்.

மேலும் விஞ்ஞானிகள் கூறும்போது “இது நமது வலிமையை வெளிப்படுத்த, நிருபிக்கவே ஆகும். நமது 50 செயற்கைகோள்கள் விண்வெளியில் உள்ளன, இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் அதிக அளவிலான எண்ணிக்கை ஆகும். இவ்வளவு செயற்கைகோள்களையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமை ஆகும். ஆகவே எங்களிடமும் இத்தகைய ஆயுதம் உண்டு என உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்கின்றனர்.

பல ராணுவ வல்லுநர்களும் இக்கருத்தினை வழிமொழிகின்றனர். அதாவது இன்று உலகில் யாரையும் நம்ப முடியாது மேலும் போர்முறைகளும் மாற்றம் கண்டு வருகின்றன. நமது செயற்கைகோள்கள் வீழ்த்தப்பட்டால் ஒற்றை குண்டு கூட வீசாமல் நமது நாட்டை பொருளாதாரம், தகவல் தொடர்பு என பல வகைகளில் முடக்கி நாசம் செய்ய எதிரிகளால் முடியும். ஆகவே அவர்களுக்கு அத்தகைய சிந்தனைகள் தோன்றாமல் இருக்க இத்தகைய ஆயுதங்கள் இன்றியமையாத தேவை ஆகிறது.