
தரைப்படை, கபபற்படை, விமானப்படை, பாதுகாப்பு தொழிற்சாலைகள் மற்றும் பிற பாதுகாப்பு அமைச்சக பணியாளர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் சம்பள தொகையான 500கோடி ருபாயை கொரோனா எதிர்ப்பு போராட்டத்திற்கென வழங்க முன்வந்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தனது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ஒரு கோடி ருபாயை வழங்க முடிவு செய்துள்ளார்.
தேசம் முதலில் மற்றவை எல்லாம் பின்னால் எனும் கொள்கைக்கு இச்செயல் உதாரணமாக உள்ளது.
HAL, OFB, DRDO, பல்வேறு கப்பல் கட்டுமான நிறுவனங்களும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.