புல்வாமா தாக்குதலில் தொடர்பு: அப்பா-மகளை கைது செய்துள்ள என்ஐஏ

  • Tamil Defense
  • March 5, 2020
  • Comments Off on புல்வாமா தாக்குதலில் தொடர்பு: அப்பா-மகளை கைது செய்துள்ள என்ஐஏ

புல்வாமா தாக்குதல் தொடர்பாக தற்போது தேசிய பாதுகாப்பு முகமை நடத்தி வரும் ஆய்வில் பெரிய முன்னேற்றம் ஒன்று நடந்துள்ளது.தாக்குதலில் தொடர்புடையவர்கள் என தற்போது காஷ்மீரின் லெத்போரா பகுதியில் அப்பா மற்றும் மகளை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

50 வயதான தாரிக் அகமது மற்றும் அவரது 23 வயது மகள் இன்சா ஜன் ஆகிய இருவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.இவர்களுக்கு புல்வாமா தாக்குதலில் தொடர்புள்ளது என அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஹகிபோரா கிராமத்தை சேர்ந்தவர்கள்.தாரிக் அகமது தெற்கு காஷ்மீர் பகுதியில் டிப்பர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.

2018-19 வரையிலான காலகட்டத்தில் இவர்கள் பயங்கரவாதிகளுக்கு உணவும் இருப்பிடமும் கொடுத்துள்ளனர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இன்சா ஜன் என்பவர் பாக்கை சேர்ந்த கண்ணிவெடி நிபுணரான முகமது உமர் பருக் என்பவனுடன் தொலைபேசி வாயிலான தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார்.