புதிய நான்கு பொசைடான் விமானங்கள்-விரைவில் டெலிவரி

  • Tamil Defense
  • March 10, 2020
  • Comments Off on புதிய நான்கு பொசைடான் விமானங்கள்-விரைவில் டெலிவரி

இந்தியா இரண்டாவது தொகுதியாக ஆர்டர் செய்த நான்கு பொசைடான் விமானத் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.மார்ச் 5 2020ல் வாசிங்டன் போயிங் தளத்தில் எடுக்கப்பட்ட முதல் விமானத்தின் புகைப்படங்கள் இணையத்தில் பரவின.

ஏற்கனவே முதல் தொகுதியாக எட்டு விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டு பெறப்பட்டன.அதன் பிறகு இரண்டாவது தொகுதியாக நான்கு விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டன.அதன் பிறகு மூன்றாவது தொகுதியாக ஆறு ஆர்டர் செய்யப்பட உள்ளது.

இந்த புதிய விமானமான serial IN328 விமானத்தின் வால்பகுதியில் DAB எழுதப்பட்டுள்ளது.இதன் அர்த்தம் இந்த புதிய விமானங்கள் கோவாவின் டபோலிமில் உள்ள ஐஎன்எஸ் ஹன்சா தளத்தில் நிலைநிறுத்தப்படும்.

இதற்கு முன் பெறப்பட்ட எட்டு பொசைடான் விமானங்களும் சென்னை அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி என்ற தளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.அவற்றின் வால்பகுதியில் ARK என எழுதப்பட்டிருக்கும்.

தற்போது கடற்படை ஐந்து Ilyushin Il-38 Sea Dragon விமானங்களை இயக்கி வருகிறது.இந்த சோவியத் கால விமானங்களை புதிய பி-8 கொண்டு படையில் இருந்து விடுவிக்கப்பட இருந்தது.
ஆனால் தற்போது அடுத்த ஐந்து இந்த சீடிராகன் விமானங்கள் விடுவிக்கப்பட வாய்ப்பில்லை.
படிப்படியாக பி-8 விமானங்கள் இணைக்கப்பட்டு அதன் பின் சீ டிராகன் விமானங்கள் விடுவிக்கப்படும்.

இதற்கு முன் Tupelov Tu-142MK-E விமானங்களும் இதே போலவே விடுவிக்கப்பட்டன.