நவீனத்துவம் வாய்ந்த “எதிர்கால காலாட்படை சண்டை வாகனம” – சில வருடங்களில் !!

  • Tamil Defense
  • March 28, 2020
  • Comments Off on நவீனத்துவம் வாய்ந்த “எதிர்கால காலாட்படை சண்டை வாகனம” – சில வருடங்களில் !!

கடந்த 2016ஆம் ஆண்டு முதலே இத்திட்டம் தொடங்கப்படுவதாக பேசப்பட்டு வந்தாலும் பல்வேறு தடங்கல்கள் காரணமாக தள்ளி போய்க்கொண்டு இருந்த நிலையில், மீண்டும் பணிகளை முழுவீச்சில் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த “எதிர்கால காலாட்படை சண்டை வாகனம்” (FICV – Futuristic Infantry Combat Vehicle) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் (DRDO) ஆயுத தொழிற்சாலகள் (OFB) ஆகியவை இணைந்து பணியாற்றும் திட்டமாகும். இத்திட்டம் சுமார் 8பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்டதாகும்.

இந்த வாகனத்தின் தயாரிப்பு சுமார் மூன்று முதல் ஐந்து வருடங்கள் பிடிக்கும் பின்னர் சோதனைகள் அதன் பின்னர் தரைப்படையின் திருப்தி ஆகியவை பொறுத்து தயாரிப்பு பணிகள் தொடங்கும். இந்த வாகனத்தின் மார்க்1 ரகமானது பல வருடங்களாக ரஷ்யாவிடமிருந்து அனுமதி பெற்று நாம் தயாரிக்கு பிம்பி2 சரத் (BMP2 SARATH) வாகனத்தை ஒதுக்க இந்திய தரைப்படைக்கு உதவும்.

இந்த எதிர்கால காலாட்படை சண்டை வாகனத்தின் மார்க்2 ரகமானது மிகவும் நவீனத்துவம் கொண்டதாக இருக்கும். இதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு 10வருட வரை தேவைப்படும்.

FICV மார்க்1 வாகனமானது ஒரு 30மில்லிமீட்டர் தானியங்கி துப்பாக்கியுடனும், சுமான் 1400மீட்டர்களை தாக்குதல் வரம்பை கொண்டு தானியங்கி க்ரனெட் லாஞ்சர் (AGL – Automatic Grenade Launcher) மற்றும் 4,000 மீட்டர்கள் அளவுக்கு தாக்குதல் வரம்பை கொண்ட டாங்கி எதிர்ப்பு ஏவுகணை அமைப்பையும் (ATGM – Anti Tank Guided Missile) கொண்டிருக்கும். மேலும் இதன் ஆயுத அமைப்பானது தெர்மல் இமேஜருடன் (Thermal Imager) கூடிய தாக்குதல் கட்டுபாட்டு அமைப்புடன் (Fire Control System) இணைக்கப்ட்டிருக்கும் என்பது கூடுதல் சிறப்பாகும்.