மருத்துவ உலகில் புதிய புரட்சி !! சாதித்த விசாகப்பட்டினம் கடற்படை தள பணியாளர்கள் !!

முப்படைகளும் பாதுகாப்பு அமைசகத்தின் கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் கொரோனாவுக்கு எதிரான போரில் பங்கு பெற்றுள்ள நிலையில், விசாகப்பட்டினம் கடற்படை தள பணியாளர்கள் தற்போது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பை தந்துள்ளனர்.

அதாவது ஒரு சாதாரண ஆக்ஸிஜன் சிலிண்டர் மூலமாக ஒருவருக்கு மட்டுமே ஆக்ஸிஜன் வழங்க முடியும்.

தற்போது இவர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டரில் PORTABLE MULTI-FEED OXYGEN MANIFOLD எனும் கருவியை பொருத்தியுள்ளனர். இதன் மூலம் ஒற்றை சிலிண்டரில் இருந்து 6 நபர்களுக்கு ஆக்ஸிஜன் கொடுக்க முடியும். இதன் காரணமாக கொரோனா தொற்றினால் அதிகம் பேர் சிகிச்சை பெறும் இடங்களில் மருத்துவ பணியாளர்களுக்கு இது பேருதவியாக அமையும்.

இந்த கொரோனா தொற்றினால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டால், அவர்களில் 5 முதல் 8% பேருக்கு வெண்டிலேட்டர் கருவியின் உதவி தேவைப்படும் ஆனால் பெரும்பாலானோருக்கு மூச்சு திணறல் காரணமாக ஆக்ஸிஜன் தேவைப்படும்.

ஆகவே ஏற்கனவே உள்ள வசதிகளை வைத்து பலருக்கு சிகிச்சை அளிப்பது என்பது கடினமான விஷயம் ஆனால் இக்கருவி அந்த பிரச்சினையை களைய பேருதவியாக அமையும்.

இந்த கருவி விசாகப்பட்டினத்தில் உள்ள ஐ.என்.எஸ். கல்யாணி நடற்படை மருத்துவமனையில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு, தயாரிப்பு நிலையை எட்டி உள்ளது.

தற்போது ஒரு நேரத்தில் 120 பேருக்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையில், 10MOM கருவிகளை வைத்து 120பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு தயாரிப்பு நிலையில் உள்ளது.