
இந்திய விமானப்படையின் சரிந்து வரும் ஸ்குவாட்ரான்களின் எண்ணிக்கையை சரிகட்ட புதிய நவீன 83 தேஜஸ் Mk-1A விமானங்கள் வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
38000 கோடிகள் செலவிலான இந்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.தற்போது முதல் கட்டமாக 40 தேஜஸ் விமானங்கள் பெறப்பட்டு வருகிறது.தற்போது ஆர்டர் செய்யப்படும் விமானங்கள் முந்தையதை விட நவீனமானது ஆகும்.
இந்த புதிய ஆர்டர் மேக்இன்இந்தியா திட்டத்திற்கு வலுசேர்க்கும்.இந்த புதிய 83 விமானங்களோடு விமானப்படையில் மொத்த தேஜஸ் விமானத்தின் எண்ணிக்கை 123ஆக இருக்கும்.
இந்த புதிய Mk-1A ரக விமானங்கள் டிஜிட்டல் ரேடார் வார்னிங் ரிசிவர், தற்காப்பு ஜாமர் பாட், ஏஇஎஸ்ஏ ரேடார்,நவீன பிவிஆர் ஏவுகணைகள் ஆகியவற்றோடு வரும்.
ஒப்பந்தம் கையெழுத்தான மூன்று வருடத்தில் முதல் தேஜஸ் விமானம் விமானப்படைக்கு டெலிவரி செய்யப்படும்.
இந்த ஒப்பந்தம் முன்னதாக 50000 கோடிகள் எனபேசப்பட்டது.ஆனால் அதன் பிறகு பல்வேறு கட்ட விலைகுறைப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு 38000கோடிகளாக முடிக்கப்பட்டுள்ளது.