இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த மசூத் ஆஸார் !!

  • Tamil Defense
  • March 26, 2020
  • Comments Off on இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த மசூத் ஆஸார் !!

ஜெய்ஷ் இ மொஹம்மது பயங்கரவாத அமைப்பின் நிறுவனரும் இந்தியாவில் பல தாக்குதல்களை நிகழ்த்தியதின் பின்னனியிலும் இருப்பவன் மசூத் ஆஸார். இவனை உயிருடன் அல்லது பிணமாக பிடிப்பது இந்தியாவின் கொள்கையில் பிரதானமாகிவிட்டது. இவனுடைய வளர்ச்சிக்கு பின்னால் முழுக்க முழுக்க இருப்பது பாகிஸ்தான் ராணுவமாகும்.

நியு யார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் அபிஜித் சாட்டர்ஜி என்பவர் “தப்பித்த பயங்கரவாதி” என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் “தற்போதைய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றிய படைகளை எதிர்த்து போரிட பாகிஸ்தான் ராணுவம் பல குழுக்களை தூண்டி விட்டும், பயிற்சி அளித்ததாகவும் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி அதில் பல குழுக்கள் இன்றளவும் சுமார் 40ஆண்டுகள் கழித்தும் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வருகின்றன” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷர்ஃப் அவர்களும் பாகிஸ்தானிய உளவுத்துறை உதவியுடன் தான் இந்தியாவில் ஜெய்ஷ் இயக்கம் தாக்குதல்களை மேற்கொண்டது எனும் கருத்தை அங்கீகரித்துள்ளார்.

இது மற்றும் பல பிற காரணங்களுக்காக மசூத் ஆசார் இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதி ஆகியுள்ளான். ஆஸாரின் இந்த தாக்குதல்கள் இந்தியாவை மிகவும் கோபப்படுத்தி உள்ளது. ஜெய்ஷ் இயக்கம் புல்வாமாவில் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பாலகோட்டை தாக்கி கொடுத்த பதிலடி இதில் இந்தியா எவ்வளவு தீர்க்கமான முடிவில் உள்ளது என்பதை காட்டுகிறது.

மசூத் ஆஸார் இவ்வளவு சுதந்திரமாக செயல்படுவது இந்திய அதிகாரிகளிடையே மிகுந்த கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒருகாலத்தில் இந்திய சிறையில் வாடி கொண்டிருந்தவனை அவனது தம்பி மற்றும் சகாக்கள் இணைந்து ஒரு விமானத்தை கடத்தி அதன் முலம் மீட்டனர். இச்சம்பவம் நடைபெற்ற சிறிது காலம் கழித்து தான் ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்பை தோற்றுவிக்கிறான்.

மேலும் அபிஜித் அவர்கள் குறிப்பிடும் போது மசூத் ஆஸார் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜாம்பியா, இங்கிலாந்து என பல நாடுகளுக்கு சென்று ஜிஹாத்துக்கு ஆள் சேர்த்தும் நிதி பெற்றும் உள்ளதாக தெரிவிக்கிறார்.