மேஜர் சியாம் சுந்தர்

படைப்பிரிவு: 38RR/ 10Madras

சர்வீஸ் நம்பர்: IC-57180 M

பிறப்பு : Aug 2, 1975

சேவை : இராணுவம்

தரம் : மேஜர்

படைப் பிரிவு : 38வது RR

ரெஜிமென்ட் : மெட்ராஸ்

விருது : சேனா விருது

வீரமரணம் : மார்ச் 5,2006

மேஜர் சியாம் சுந்தர்  2 ஆகஸ்டு  1975 ல்  பஞ்சபகீசன் மற்றும் லஷ்மி தம்பதியருக்கு கொல்கத்தாவின் சிஷு மங்கள் என்னுமிடத்தில் மகனாய் பிறந்தார்.

ஆந்த்ரா அசோசியேசன் பள்ளியில் தனது ஆரம்ப கட்ட பள்ளிப் படிப்பை முடித்த சியாம் அவர்கள் பள்ளியில் படிக்கும் போதே மார்சீயல் ஆர்ட் பயின்றவர்.சிறந்த விளையாட்டு வீரரும் கூட.
 
என்டிஏவில் சிறப்பான பயிற்சி பெற்ற பின்னர் டேராடூனீல் உள்ள இராணுவ அகாடெமியில் 1997ல் பயிற்சியை முடித்தார்.பயிற்சி முடித்த பின்னர் மிகவும் சாவாலான இன்பான்ட்ரி எனப் பெயர் பெற்ற 10வது மெட்ராஸ் ரெஜிமென்டில் லெப்டினன்ட்-ஆக பணியில் இணைந்தார்.

பணியில் இணைந்த பின் பல்வேறு என்கௌன்டர்களில் முன்னனியில் நின்று தீவிரவாதிகளை வேட்டையாடியுள்ளார்.

தனது தேர்ந்த திறமை மற்றும் தலைமைப் பண்பு காரணமாக விரைவிலேயே மேஜராக பணிஉயர்வு பெற்று 38வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் படையில் மாறுதலாகி தீவிரவாத எதிர்ப்பு ஆபரேசன்களில் கலந்து கொள்ள காஷ்மீருக்கு சென்றார்.

Poonch Operation : 05 March 2006

38வது RR படை பூஞ்ச் பகுதியில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தது.மார்ச் 05, 2006லன பிம்பர் காலி செக்டார் வனப்பகுதியில் தீவிரவாதிகள் ஊருவியிருப்பதாக படையினருக்கு தகவல் கிடைக்க ,.நிலைமை ஆராய்ந்துணர்ந்த மேஜர் சியாம் அங்கு ஆபரேசன் நடத்த தயாரானார்.

தனது படையினருடன் சந்தேகத்திற்கிடமான பகுதிக்கு சென்னறு ஆபரேசனை தொடங்கும் வேலையில் திடீரென தீவிரவாதிகள் தாக்க கடும் துப்பாக்கி சண்டை நடக்க ஆரம்பித்தது.

சண்டை நடந்து கொண்டிருக்கும் போதே தனது சக வீரரான செபெ ராமா ராவுக்கு பலத்த குண்டடிபட்டு கீழே விழ அவருக்கு இரத்தம் ஓடி கொண்டிருந்தது.நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மேஜர் தனது உயிரையும் பொருட்படுத்தாது தன் நன்பரின் உயிரை காக்க முன்னேறி அவரை பின்னோக்கி கொண்டு வரும் போது எதிரியின் தோட்டா அவரின் உடலை துளைத்து செல்ல படுகாயத்துடன் அவர் கீழ் விழுந்து வீரமரணம் அடைந்தார்.

போரில் காட்டிய துணிவு காரணமாக அவருக்கு சேனா மெடல் வழங்கப்பட்டது.

மேஜருக்கு தீபா என்ற மனைவியும், திஷா என்ற சிறிய குழந்தையும் இருக்கிறது.