இந்தியாவின் குறுகிய கால போர்த்திறனில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கம் !!

  • Tamil Defense
  • March 25, 2020
  • Comments Off on இந்தியாவின் குறுகிய கால போர்த்திறனில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கம் !!

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ராணுவ வீரர் ஒருவருக்கும் இத்தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சகம் தற்போது அனைத்து ஆயுத கொள்முதல் திட்டங்களையும் தள்ளி வைத்துள்ளது. இதில் தரைப்படையும், கடற்படையும் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் டென்டர்களுக்கான பதிலை தாக்கல் செய்வதற்கான நாட்களையும் கோவிட்19 காரணமாக பாதுகாப்பு அமைச்சகம் நீட்டித்துள்ளது.

இந்திய தரைப்படையானது சுமார் 10பில்லியன் டாலர்கள் மதிப்பிலான திட்டங்களை தள்ளிவைக்க வேண்டியதாகிறது.

இதில் மனிதன் சுமக்ககூடிய அளவிலான பறக்கும் வெடிகுண்டு அமைப்புகள் (Man portable Loitering Munitions), இலகுரக இயந்திர துப்பாக்கிகள் (Light Machine Guns), தாக்குதல் துப்பாக்கிகள் (Assault Rifles), கவச வாகனங்கள் (Armoured Vehicles), கவசத்தை துளைக்கும் டாங்கி குண்டுகள் என பல ஆயுத ஒப்பந்தங்கள் அடங்கும். மேலும் இவை அனைத்தும் தற்போது இன்றியமையாத தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட்19 காரணமாக தொற்று பரவாமல் தடுக்க முப்படைகளும்
பல்வேறு கட்டுபாடுகளை தனது வீரர்களுக்கு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.