உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு போர் ஆயுத கட்டுப்பாட்டு அமைப்பு !!

  • Tamil Defense
  • March 21, 2020
  • Comments Off on உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு போர் ஆயுத கட்டுப்பாட்டு அமைப்பு !!

லார்ஸன் அன்ட் டுப்ரோ நிறுவனம் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் ஆயுத கட்டுப்பாட்டு அமைப்பு (ASW FCS) ஒன்றினை தயாரித்துள்ளது.

இந்த நீர்மூழ்கி எதிர்ப்பு போர் ஆயுத கட்டுப்பாட்டு அமைப்பு
கப்பலின் சோனார் மற்றும் போர் மேலாண்மை அமைப்புடன் (CMS) இடைமுகப்படுத்துகிறது மேலும் போர் திட்டமிடல் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு ஆயுதங்களை ஏவுவதற்கு உதவுகிறது.

இந்த ASW FCS, கப்பலின் SONARலிருந்து பெறப்பட்ட இலக்கின் தரவை உயர் தெளிவுத்திறன் காட்சியில் காண்பிக்கும் இலக்கை தாக்கி அழிப்பதற்கான உகந்த தீர்வையும் கணக்கிடு செய்து காண்பிக்கும். இதை எப்படி செய்கிறது எனில் குறிப்பிட்ட ஆயுதத்துடன் இடைமுகப்பட்டு தாக்குதல் கட்டுப்பாட்டு தீர்வை ஆயுதத்திற்கு கடத்துகிறது மற்றும் ஏவுதலுக்கு அங்கீகாரம் அளிக்கிறது.

இந்த அமைப்பின் முக்கிய அம்சங்கள்:

மட்டு கணினி கட்டமைப்பு.

இரட்டை மல்டி-ஃபங்க்ஷன் கன்சோல்கள்.

பணிச்சூழலியல் நடவடிக்கை இடைமுகம்.

உள்ளமைக்கப்பட்ட சோதனை மற்றும் அளவுத்திருத்த வசதி.

ASW FCSஆல் இடைமுகப்படுத்தவும், தீர்வை வழங்கவும் முடியும்.

நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் லாஞ்சர்,
இலகுரக நீரடிகணை லாஞ்சர்,
கனரக நீரடிகணை லாஞ்சர்,
மேம்பட்ட நீரடிகணை பாதுகாப்பு அமைப்பு.