இந்தியாவின் சுதேசி ஆயுத தயாரிப்பு ஒரு மிகப்பெரிய அடிப்படை தவறின் மேல் கட்டப்படுகிறது !!

  • Tamil Defense
  • March 29, 2020
  • Comments Off on இந்தியாவின் சுதேசி ஆயுத தயாரிப்பு ஒரு மிகப்பெரிய அடிப்படை தவறின் மேல் கட்டப்படுகிறது !!

கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சகம் 2020ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு கொள்முதல் கொள்கையை (DPP – Defence Procurement Policy) வெளியிட்டது. அதில் சுதேசி பங்களிப்பை அதிகரித்து வெளிநாட்டு இறக்குமதியை குறைப்பது, அதிக அளவிலான உள்நாட்டு பொருட்கள், அதிக ஆஃப்செட்கள், குத்தகைக்கான புதிய வரைவு என சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆனால் நமது சுதேசி திட்டம் அடிப்படையிலேயே தவறானது காரணம் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் தயாரிப்பு என அனைத்திலுமே பொதுத்துறை நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. நீண்ட காலம் முன்பே தனியார் நிறுவனங்களும் பாதுகாப்பு துறையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். இது ஒரு போட்டி சூழலை உருவாக்கி தரமான உள்நாட்டு தயாரிபாபில் உருவான ஆயுதங்களை பெற வழிவகுக்கும்.

சர்வதேச அளவில் பார்த்தால் கூட அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் மிகச்சிறந்த பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பு திட்டங்கள் உள்ளன.

சீனாவிலும் நம் நாட்டை போன்றே பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன ஆனால் தனியார் நிறுவனங்களும் போட்டியில் உள்ளதால் சீனாவின் முப்படைகளும் குறைந்த காலத்தில் தேவையான நவீன ஆயுதங்களை பெற முடிகிறது. சீன ராணுவத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தின் வெற்றியின் ரகசியம் இதுவே.

நமது படைகளின் பங்களிப்பும் ஆயுத தயாரிப்பில் அதிகம் இருத்தல் வேண்டும்.இதன் முலமே படைதளுக்கு தேவையான ஆயுதங்களை உருவாக்கி காலப்போக்கில் நல்ல முறையில் அனுபவத்தின் அடிப்படையிலும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் நவீனமயமாக்கலை செயல்படுத்த முடியும்.

பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பு மிகப்பெரிய அளவிலான வெற்றியை கொடுக்கும். ஆகவே தயங்காமல் தாமதிக்காமல் அத்தகைய கொள்கை வரைவினை வெளியிட்டு செயல்படுத்துதல் வேண்டும். இதற்கு உதாரணமாக இஸ்ரோ மற்றும் கோத்ரேஜ் நிறுவனங்களின் கூட்டுறவை குறிப்பிடலாம் தேசத்திற்கு மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைத்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

சில வகைகளில் தனியார் துறை நிறுவனங்களுக்கு பாதுகாப்பு துறையில் சலுகைகள் கிட்டியிருந்தாலும் இத்துறையில் புதிதாக காலடி எடுத்து வைப்பதன் காரணமாக நவீன தொழில்நுட்பங்கள் அவர்களிடம் இல்லை இதை சரிப்படுத்த முலோபாய பங்களிப்பு திட்டங்கள் செயல்படுத்தபடுகின்றன. இதன் மூலம் சர்வதேச அளவில் பெரிய நிறுவனங்களுடன் இணைந்து கொள்ள முடியும் இதில் கிடைக்கும் அனுபவத்தை வைத்து படிப்படியாக முன்னேறி சுயமாக மிகப்பெரிய அளவில் ஆயுத தயாரிப்பில் ஈடுபட முடியும்.

ஆகவே இக்குறைகளை களைந்து தாமதிக்காமல் இத்திட்டங்களை செயல்படுத்துவது நல்லது.