இந்திய படையின் எதிர்காலம் ORCA வா அல்லது AMCA வா ??

  • Tamil Defense
  • March 31, 2020
  • Comments Off on இந்திய படையின் எதிர்காலம் ORCA வா அல்லது AMCA வா ??

இந்திய கடற்படைக்கான நவீன போர்விமானத்திற்கான தேவைகளின் அடிப்படையில் பிறந்தது தான் ORCA – Omni Role Combat Aircraft அல்லது TEDBF – Twin Engine Deck Based Fighter இது கடற்படை பல தொழில்நுட்ப ரீதியிலான காரணங்கள் அடிப்படையில் கடற்படை தேஜாஸ் விமானத்தை நிராகரித்ததால் அதற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட திட்டமாகும். தற்போது கேள்வி என்னவென்றால் இந்திய விமானப்படையும் இத்திட்டத்தில் பங்கு பெறுமா என்பது தான்.

ஏற்கனவே பல்வேறு போர்விமான திட்டங்கள் நடைமுறையில் உள்ளதால் TEDBF/ORCA திட்டம் இரு கட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. மேலும் HAL மற்றும் ADA தற்போது MWF மற்றும் AMCA திட்டங்களை ஒரே நேரத்தில் செயல்படுதீதி வருகிறது. MWF MK2 திட்டம் தான் உலகின் கடைசி 4.5தலைமுறை போர் விமான திட்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த MWF MK2 விமானங்கள் தற்போது இந்திய விமானப்படை பயன்படுத்தி வரும் மிக்29, மிராஜ் ஆகிய விமானங்கள் மட்டுமின்றி ஜாகுவார் விமானங்களுக்கும் மாற்றாக விளங்கும் ஆகவே தற்போது 108 MWF MK2 விமானங்களை வாங்க இந்திய விமானப்படை விருப்பம் தெரிவித்து இருந்தாலும் எதிர்காலத்தில் இது 200க்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல் இந்திய விமானப்படை சுமார் 150AMCA விமானங்களை வாங்குவதாக HAL நிறுவனத்திற்கு வாக்குறுதி அளித்துள்ளது, அதில் 40விமானங்கள் மார்க்1 ரகம் என்பது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 110 AMCA விமானங்களும் அதை விட மேம்பட்ட மார்க்2 ரகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.இதில் மார்க்1 ரகம் GE-414 என்ஜினையும் மீதமுள்ள மார்க்2 விமானங்கள் புதிய TVC ENGINE – Thrust VeCtoring என்ஜினையும் கொண்டிருக்கும். இந்த இரு வகை விமானங்களும் 5ஆம் தலைமுறை தொழிலுநுட்பத்தை கொண்டிருக்கும் எனவும் 2035ஆம் ஆண்டு வாக்கில் இது தயாரிப்பு நிலையை எட்டும் எனவும் கூறப்படுகிறது.

எதிர்காலத்தில் இந்திய விமானப்படை தேஜாஸ் மார்க்1, தேஜாஸ் மார்க்1 ஏ, MWF MK2, AMCA MK1 மற்றும் AMCA MK2 ஆகிய விமானங்களை கொண்டு நிரப்பப்படும் நிலையில் தற்போது வெளிநாட்டில் இருந்து 114 விமானங்களை வாங்குவதற்கான திட்டம் ரத்து செய்யப்படாமல் TEDBF/ORCA விமானத்தை இந்திய விமானப்படை வாங்காது.