
IUCAV-UHF20 என்பது “உலர் காவேரி என்ஜின்” ஆகும். இது இந்தியாவின் முதல் தன்னாட்சி திறன் கொண்ட ஆளில்லா போர் விமானமாகும் (IUCAV GHATAK) “கட்டக்” என இது அழைக்கப்படும். இதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) ஒரு பிரிவான (GTRE) மேற்கொள்ளும்.
DRDO விற்கு IUCAV-UHF20 திட்டத்திற்கென 1068.69 கோடி ருபாய் வழங்கப்பட்டுள்ளது. அசல் காவேரி திட்டம் இலகுரக தேஜஸ் போர் விமானத்தை இயக்குவதற்காகவே இருந்தது, ஆனால் போர் விமானங்களுக்கு போதுமான உந்துதலை வழங்க முடியாததால் அது நிறுத்தப்பட்டது. அதன் புத்துயிர் பெற்ற அவதாரத்தில் என்ஜின் மாற்றியமைக்கப்பட்டு, பின் பர்னர்கள் IUCAV திட்டத்தில் இணைக்கப்படும்.
IUCAV-UHF20 இன்ஜின் 15 டன் கட்டக் ஆளில்லா போர் விமானத்திற்கு சக்தி அளிக்க 52 கிலோ நியூட்டன் அளவிலான உந்துதலைக் கொண்டிருக்கும்.
இந்த கட்டக் ஆளில்லா போர் விமான திட்டம் நம் நாட்டின் கனவு திட்டங்களில் ஒன்றாகும் இது வெற்றி பெறும் பட்சத்தில் விமான கட்டுமான பொறியியலில் நாம் அசாத்திய முன்னேற்றம் பெறுவோம் என்றால் அது மிகையாகாது.