கோரானா சோதனை அமைப்புகளை தென் கொரியாவிடம் இருந்து இறக்குமதி செய்ய இந்தியா திட்டம்

  • Tamil Defense
  • March 22, 2020
  • Comments Off on கோரானா சோதனை அமைப்புகளை தென் கொரியாவிடம் இருந்து இறக்குமதி செய்ய இந்தியா திட்டம்

கொரானா வைரஸ் சோதனைகளை துரிதப்படுத்த தென்கொரியாவிடம் இருந்து கோவிட்-19 சோதனை அமைப்புகளை பெற இந்தியா திட்டமிட்டுள்ளது.இதுவரை 14000 பேர்களை மட்டுமே இந்தியா சோதனை செய்துள்ளது.

இந்தியா போன்ற மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டில் இது மிக மிக குறைவு ஆகும்.இதனால் தென் கொரிய நிறுவனம் ஒன்றுடன் கோவிட்-19 சோதனை கிட்களை வாங்க இந்தியா பேசி வருகிறது.

தென் கொரிய வேகமாக சோதனை செய்துவருகிறது.இதுவரை 320000 பேர்களை சோதனை செய்துள்ளது.அதில் 8000பேர் நோய்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என உறுதிப்படுத்தியுள்ளது.

இதே போல போன் பூத் போன்ற சோதனை நிலையங்களையும் நிறுவியுள்ளது.இதன் மூலம் 7
நிமிடத்தில் நோய் தொற்றை கண்டறிய முடியும்.